» செய்திகள் - விளையாட்டு » மாவட்ட செய்தி (திருநெல்வேலி)

அனுமதி பெறாத‌ போராட்டத்திற்கு மக்களை தூண்டினால் குண்டர் சட்டம் பாயும் : ஜே.எஸ்.பி., பேட்டி!

புதன் 16, மே 2018 7:50:30 PM (IST)

தூத்துக்குடி ஸ்டெர்லைட் ஆலையை கண்டித்து அனுமதியில்லாத போராட்டத்திற்கு மக்களை தூண்டினால் குண்டர் சட்டம் பாயும் என ஜே.எஸ்.பி., செல்வன் நாகரத்தினம் தெரிவித்துள்ளார்.

தூத்துக்குடி ஸ்டெர்லைட் ஆலையை எதிர்த்து வரும் 22ம் தேதி போராட்டம் நடத்த உள்ளதாக போராட்டக்குழுவினர் என்ற பெயரில் சமூக வலைத்தளங்களில் செய்திகள் வந்தவண்ணம் உள்ளது. இதுகுறித்து தூத்துக்குடி ஜே.எஸ்.பி., செல்வன் நாகரத்தினம் இன்று செய்தியாளர்களிடம் கூறும்போது, வரும் 22ம் தேதி போராட்டம் குறித்து இதுவரை காவல்துறையிடம் எவ்வித அனுமதி கேட்டும், அதற்கான கோரிக்கை மனுவும் அளிக்கப்படவில்லை. இந்நிலையில், வன்முறையை தூண்டும் வகையிலும், சட்டவிரோதமாக கூட்டத்தை சேர்க்கும் விதமாகவும் சிலர் செயல்பட்டு வருகின்றனர். அவர்களை, காவல்துறையினர் கண்காணித்து வருகின்றனர். 

அரசின் அனுமதிபெற்ற ஸ்டெர்லைட் தொழிற்சாலை விவகாரத்தை மாவட்ட நிர்வாகம், தமிழக அரசு மற்றும் நீதிமன்றம் ஆகியவை இணைந்து கவனித்து வருகின்றன. அனுமதியில்லாத போராட்டத்திற்கு மக்களை அழைத்து வணிகர்கள் மற்றும் போராட்டக்குழுவினர் என்ற பெயரில் அறவழி தவறி வன்முறையை தூண்டினால் அவர்கள் மீது காவல்துறை கடும் நடவடிக்கை எடுக்க்கப்படும். அதற்காக காவல்துறை குண்டர் சட்டத்தை பயன்படுத்தவும் தயங்க மாட்டோம் என்றார்.


மக்கள் கருத்து

geethaமே 17, 2018 - 03:44:34 PM | Posted IP 162.1*****

தூத்துக்குடி தவாஉ மாவட்ட செயலாளர் உட்பட சிலர் கொஞ்ச நாளைக்கு முன்னாடி ஸ்டெர்லைட்க்கு போயி ஒரு கணிசமான தொகை கேட்டு அவர்கள் தரவில்லை. அந்த பாதிப்பினால் தற்போது தங்களது ஊர் பக்தியை காட்டுகிறார்கள். இவர்களை போன்றவர்களை போராட்டத்தில் ஈடுபட்டுள்ள மக்கள் நன்கு புரிந்து கொண்டுள்ளார்கள். இவர்கள் போன்றவர்கள் போராட்டத்தில் கலந்து கொண்டு எதற்காக இப்படி படம் போடுகிறார்கள் என்பது எல்லாருக்குமே தெரியும் மக்களே

வி சி கமே 17, 2018 - 02:49:13 PM | Posted IP 162.1*****

சினிமா பார்த்து ரொம்ப கெட்டு டாரு சார் .

Kumarமே 17, 2018 - 11:35:19 AM | Posted IP 162.1*****

தூ... வெட்கக்கேடு ... ஒரு ஒட்டுமொத்த ஊரும் தங்கள் சந்ததி காக்க ... வாழ்வுரிமை காக்க களம் இறங்கி போராட வேண்டிய அவல சூழல் ஏற்பட்டிருக்க ... மக்களை காக்க முற்படாமல், ஒரு தனியார் நிறுவனத்தை காக்க 144 போடவும் அவர்களை பாதுகாக்க நடவடிக்கை எடுப்பதும் ஜனநாயகத்துக்கு பெருத்த அவமானம் .. மக்களுக்காக போராடுபவர்கள் மீது பொய் வழக்கு... 107 வழக்கு போடுவதால் எங்க வீட்டு விளக்கமாறு கூட பயப்படாது.... மக்களை காக்க வேண்டிய அரசு, காவல்துறை கார்ப்பரேட் களவாணி யின் காலை நக்குவதா ??? நக்கி பிழைக்கும் நாய்களே..... ( *உங்களை போன்ற நயவஞ்சகர்களை நாயோடு ஒப்பிட்டதற்கு நன்றியுள்ள நாய் வர்க்கம் எங்களை மன்னிக்க வேண்டும்*) வரலாற்றில் அழிக்க முடியாத களங்கம்மடா நீங்கள் .. நாங்கள் *ஒன்று படுவோம்!!* *வெற்றி பெறுவோம்!!*

Fidelis Mascrenhasமே 17, 2018 - 10:30:42 AM | Posted IP 162.1*****

Will need 0ne lakh, cant you sense the anger and pain people are going through. Threats from a corporate is not a clever approach

Kumarமே 17, 2018 - 09:46:14 AM | Posted IP 162.1*****

பரிதானம் வாங்குகிறவர்களின் பார்வைக்கு அது இரத்தினம்போலிருக்கும்: அது நோக்கும் திசையெல்லாம் காரியம் வாய்க்கும் நீங்க எப்படி சார்?

மக்கா!மே 16, 2018 - 09:50:31 PM | Posted IP 162.1*****

எல்லாம் சரி! போராட்டத்துக்கான காரணத்தை யாராவது அறிவுபூர்வமா ஆராய்ந்தார்களா? ஏதாவது ஒரு தகுதியான துறை மூலம் ஆய்வு நடத்தி இந்த விஷயத்தை ஆதார பூர்வமாக நிரூபிக்காமல், மக்களைபயமுறுத்தும் இந்த போராட்டங்களின் உண்மை நோக்கம் ஒரு ? யே!!!

NA கிதர் பிஸ்மி மாவட்டட செயலாளர் தமிழக வாழ் உரிமை கட்சி தூத்துக்குடி (தெ)மே 16, 2018 - 09:18:09 PM | Posted IP 162.1*****

அரசு அனுமதி பெற்ற ஸ்டெர்லைட் ஆலையை அரசு .ஆட்சியர் நீதிமன்றம் மாவட்ட நிர்வாகம் அரசு அனுமதி யோடு நடத்திக் கொண்டு இருக்கிறது இந்த தூத்துக்குடி மாவட்ட மக்களுக்கு இதய நோய். கேன்சர் இரத்த அழுத்த நோய் மாரடைப்பு இன்னும் பல நோய்கள் வந்து மக்கள் இறந்து கொண்டு இருக்கிறார்களே இவர்களுக்கு யார் பொறுப்பு அதிகார வர்கத்தின் ஆட்சியாளும் அரசா அல்லது நீதிமன்ற மா அல்லது மாவட்ட ஆட்சியரா அல்லது மாவட்ட நிர்வாக மா உயிரை கொள்ளும் இந்த நச்சு ஆலையின் பணம் யாருக்கு தேவை நாட்டின் மக்கள் நோயின்றி வாழ்ந்தால் தான இந்த நாட்டிற்கு பெருமை அப்படி நோயை உண்டாக்கு இந்த நச்சு ஆலை நாட்டிற்க்கும் நகரத்திற்க்கும் தேவை இல்லை என்று மக்கள் முடிவு செய்து விட்டார்கள் அரசு செவிசாய்க்க வேண்டியது தான நியாயமாக போராட்டம் செய்யும் மக்கள் மீது குண்டர் தடுப்புச் சட்டம் பாயும் என்றாறால் என்ன நியாயம் காலுக்கு செருப்பு சரியில்லை என்றாறால் காலை யா வெட்டவா முடியும் செருப்பை தான சரிசெய்ய முடியும் அதே போல் நாட்டிற்க்கும் நாட்டு மக்களுக்கும் எது கேடு விளைவிக்கிறதோ அதை அரசே ஸ்டெர்லைட்டை எடுத்து எரிய வேண்டியது அவசியம் அப்படி செய்யவில்லை என்றால் தூத்துகுடி மக்களுக்கு சுத்தமான காற்று நீர் நிலம் கிடைக்க போவதுதில்லை தமிழக அரசே மக்களுக்காக செயல்படு இல்லையேல் இனி வரும் சந்ததிகள் வாழும் வரை போராடுவோம் வெல்க போரட்டம் வீழ்க ஸ்டெர்லைட்

அதிசயம்மே 16, 2018 - 08:35:23 PM | Posted IP 172.6*****

தூத்துக்குடி மாவட்டத்தில் தாங்கள் யாருக்கு அனுமதி வழங்கி போராட்டம் நடத்தப்பட்டுள்ளது. ஸ்டெர்லைட் எதிர்ப்பு போராட்டமானது மக்களின் உணர்வு மற்றும் உரிமைக்கான போராட்டம். இப்போராட்டத்திற்கு அனுமதி கேட்டு தங்களுக்கு கடிதம் வைக்கப்பட்டுள்ளது. தாங்களது தூத்துக்குடி பணி காலத்தில் வணிகர்கள் மற்றும் பொது மக்களின் உணர்வுகளை மதிக்காமல் தாங்கள் சட்டவிரோதமான நடவடிக்கை எடுத்த விபரங்கள் மக்கள் அனைவருக்கும் தெரியம். தாங்கள் மக்களின் உரிமைக்கான போராட்டத்தை ஒடுக்குவதற்கு குண்டர் சட்டத்தை போட்டால் நாங்கள் அதனை எதிர்கொள்ள தயாராகிவிட்டோம். ஆனால் நாளைய வரலாறு ஜே.எஸ்.பி யை காரி துப்பும்.

மக்கள் பதிவு செய்யும் கருத்துகள் தணிக்கையின்றி பிரசுரமாகும் வகையில் மென்பொருள் வடிவமைக்கப்பட்டுள்ளது. தொழில்நுட்ப குறைபாடுகள் காரணமாக கருத்துக்கள் பதிவாவதில் சிறிது காலதாமதம் ஏற்பட வாய்ப்புள்ளது. வாசகர்களின் கருத்துக்களுக்கு நிர்வாகம் பொறுப்பாக மாட்டார்கள். நாகரீகமற்ற மற்றும் பிறர் மனதை புண்படுத்தகூடிய கருத்துகளை / வார்த்தைகளைப் பயன்படுத்துவதை தவிர்க்கும்படி கேட்டுக்கொள்கிறோம்.

ஆங்கிலத்தில் தட்டச்சு செய்ய Ctrl+G -ஐ அழுத்தவும்.மேலும் தொடரும் செய்திகள்

Sponsored Ads

Sterlite Industries (I) Ltd


Tirunelveli Business Directory