» செய்திகள் - விளையாட்டு » மாவட்ட செய்தி (திருநெல்வேலி)

கர்நாடக சட்டப்பேரவை தேர்தலில் பா.ஜ.,வெற்றி : தென்காசியில் பா.ஜ.,தொண்டர்கள் கொண்டாட்டம்

புதன் 16, மே 2018 8:31:51 PM (IST)கர்நாடக சட்டசபை தேர்தலில் பா.ஜ.,104இடங்களில்வெற்றி பெற்றதை தொடர்ந்து தென்காசியில் அக்கட்சியினர் பொதுமக்களுக்கு இனிப்பு வழங்கி மகிழ்ந்தனர்.

கர்நாடக சட்டசபை தேர்தலில் பா.ஜ.,104 இடங்களில்வெற்றிபெற்று தனிப்பெரும் கட்சியாக உருவெடுத்துள்ளது. இந்த வெற்றியை கொண்டாடும் வகையில் தென்காசியில் மற்றும் குற்றாலத்தில் பா.ஜ.,வினர் பொது மக்களுக்கு இனிப்பு வழங்கியும், பட்டாசு வெடித்தும் மகிழ்ந்தனர். தென்காசி காசிவிசுவநாதர் கோவில் முன் பக்தர்கள் மற்றும் பொதுமக்களுக்கு பா.ஜ.,வினர்இனிப்பு வழங்கினர். நிகழ்ச்சிக்கு நகர தலைவர் திருநாவுக்கரசு தலைமை தாங்கினார். துணைத்தலைவர்கள் கருப்பசாமி, மந்திரமூர்த்தி, மாவட்ட செயற்குழு உறுப்பினர்கள் கருப்பசாமி, ராஜ்குமார், ராஜாசிங், நகர செயற்குழு உறுப்பினர்கள் மணி, சுப்பையா, முன்னாள் துணைத்தலைவர் பரமசிவன், இந்து முன்னணி தலைவர் இசக்கி முத்து, நாராயணன், அணித் தலைவர்கள்  சந்திரன், மாரியப்பன், சுப்பிரமணியன், கார்த்தி, வார்டு பொறுப்பாளர்கள் பாலா என்ற பாலசுப்பிரமணியன், மாரியப்பன், ஆர்எஸ்எஸ் சங்கரசுப்பிரமணி மற்றும் பலர் கலந்து கொண்டனர்.

குற்றாலம் பஸ்ஸ்டாண்டில் சுற்றுலாப் பயணிகள் மற்றும் பொதுமக்களுக்கு பா.ஜ.வினர்இனிப்பு வழங்கியும், பட்டாசு வெடித்தும் மகிழ்ந்தனர். நிகழ்ச்சிக்கு நகர தலைவர் செந்தூர் பாண்டியன் தலைமை தாங்கினார். நிகழ்ச்சியில் நகர துணைத் தலைவர் திருமுருகன், பொதுச்செயலாளர் பிலவேந்திரன், ஐடிபிரிவு தலைவர் சூர்யபிரகாஷ், காசிமேஜர்புரம் நாகராஜ், எஸ்சிஅணி மாவட்ட செயலாளர்மகேஷ், மேலகரம் மாரியப்பன், குற்றாலம் ராமர்,  குடியிருப்பு செல்லத்துரை, சுடலை, பாக்கியராஜ், மாரியப்ன், ராஜா மற்றும் பலர்கலந்து கொண்டனர்.


மக்கள் கருத்து


மக்கள் பதிவு செய்யும் கருத்துகள் தணிக்கையின்றி பிரசுரமாகும் வகையில் மென்பொருள் வடிவமைக்கப்பட்டுள்ளது. தொழில்நுட்ப குறைபாடுகள் காரணமாக கருத்துக்கள் பதிவாவதில் சிறிது காலதாமதம் ஏற்பட வாய்ப்புள்ளது. வாசகர்களின் கருத்துக்களுக்கு நிர்வாகம் பொறுப்பாக மாட்டார்கள். நாகரீகமற்ற மற்றும் பிறர் மனதை புண்படுத்தகூடிய கருத்துகளை / வார்த்தைகளைப் பயன்படுத்துவதை தவிர்க்கும்படி கேட்டுக்கொள்கிறோம்.

ஆங்கிலத்தில் தட்டச்சு செய்ய Ctrl+G -ஐ அழுத்தவும்.மேலும் தொடரும் செய்திகள்

Sponsored AdsTirunelveli Business Directory