» செய்திகள் - விளையாட்டு » மாவட்ட செய்தி (திருநெல்வேலி)

நாலுமாவடியில் இலவச கபடி பயிற்சி முகாம் : அனிதாராதாகிருஷ்ணன் பரிசுகள் வழங்கினார்

புதன் 16, மே 2018 8:40:18 PM (IST)நாலுமாவடி இயேசு விடுவிக்கிறார் ஊழியங்கள் சார்பில் 12 நாள்கள் நடைபெற்ற மூன்றாமாண்டு கோடைகால இலவச கபடி பயிற்சி முகாமில் கலந்து கொண்ட வீரர்களுக்கு மோகன் சி.லாசரஸ் தலைமையில் அனிதா ஆர்.இராதாகிருஷ்ணன் எம்.எல்.ஏ., சான்றிதழ்கள் வழங்கினார்.

தூத்துக்குடி மாவட்டம்,குரும்பூர் அருகிலுள்ள நாலுமாவடி இயேசு விடுவிக்கிறார் ஊழியங்களின் விளையாட்டுத் துறை சார்பில் கடந்த 2 ஆண்டுகளாக கிராமப்புற இளைஞர்கள் பங்கு பெறுவதற்கு வசதியாக கோடைக் காலத்தில்  இலவச கபடி பயிற்சி முகாமினை நடத்தி வருகின்றனர். இந்த ஆண்டு 3-வது ஆண்டாக கோடை கால இலவச கபடி பயிற்சிமுகாம் நாலுமாவடி காமராஜர் மேல்நிலைப்பள்ளி விளை யாட்டு மைதானத்தில் 12 நாள்கள் நடந்தது.   முதல்நாள் பயிற்சிமுகாமினை ஸ்ரீவைகுண்டம் போலீஸ் டி.எஸ்.பி. சகாயஜோஸ் கொடியசைத்து வைத்து துவக்கி வைத்தார். நிறைவு நாளன்று பயிற்சி பெற்ற வீரர்களுக்கு சான்றிதழ்கள், நினைவுப்பரிசுகள் வழங்கும் விழா நடைபெற்றது.

விழாவிற்கு நாலுமாவடி இயேசுவிடுவிக்கிறார்ஊழியநிறுவனர் மோகன் சி.லாசரஸ் தலைமை வகித்தார்.தூத்துக்குடிமாவட்ட அமெச்சூர்கபாடிக்கழக செயலாளர் கிறிஸ்டோபர்ராஜன், முகாம் ஒருங்கிணைப்பாளரும், அர்ஜுனா விருது பெற்றவரும், தமிழ்நாடு மின்சார வாரிய விளையாட்டுத்துறை அலுவலருமான  கபடி அணிவீரர் மணத்தி கணேசன் ஆகியோர் பேசினர். சிறப்பு விருந்தினராக தூத்துக்குடி மாவட்ட அமெச்சூர் கபாடிக் கழகத் தலைவரும், திருச்செந்தூர் எம்எல்ஏ.,, அனிதா ஆர். இராதா கிருஷ்ணன் எம்.எல்.ஏ.,கலந்துகொண்டு பயிற்சி பெற்றவர்களுக்கு சீருடைகள் வழங்கிப் பேசினார். முன்னதாக நாலுமாவடி இயேசு விடுவிக்கிறார் ஊழிய விளையாட்டுத்துறை ஊழியர் எட்வின் வரவேற்று பேசினார். ராஜ்குமார் நன்றி கூறினார்.

 இந்நிகழ்ச்சியில் தொழிலதிபர் ஜோபர்ட் மதுரம், திமுக மாநில மாணவரணி துணைச் செயலாளர் எஸ்.ஆர்.எஸ்.உமரிசங்கர், ஆழ்வார்திருநகரி ஒன்றிய கிழக்கு செயலாளர் நவீன்குமார், தென்திருப்பேரை நகரசெயலாளர் இராமஜெயம், ரமேஷ், இயேசு விடுவிக்கிறார் ஊழியப் பொதுமேலாளர் செல்வக்குமார், மக்கள் தொடர்பு அலுவலர் சாந்தகுமார்,பாக்கியராஜ் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.முன்னதாக  அர்ஜுனா விருது பெற்ற கபாடி அணிவீரர் மணத்தி கணேசன் தலைமையில்  பயிற்சியாளர்களாக காரப்பேட்டை பள்ளி உடற்கல்வி ஆசிரியர் தமிழ்மணி, கேடிசி பிரபாகரன், கபடி கந்தன், ராஜா, ஸ்டாலின், மைக்கேல், தாமஸ், கரிகாலன், ராஜா, அனந்த கிருஷ்ணன், பி.கணேசன் ஆகியோரைக் கொண்டு பயிற்சி அளிக்கப்பட்டது. கபாடி பயிற்சி முகாம் 12 நாள்கள் நடைபெற்றது.  

இதற்கான ஏற்பாடுகளை நாலுமாவடி இயேசு விடுவிக்கிறார் ஊழிய நிறுவனமும், தூத்துக்குடி மாவட்ட அமெச்சூர் கபடிக் கழகமும் இணைந்து ஊழிய நிறுவனர் மோகன் சி.லாசரஸ் தலைமையில், பொதுமேலாளர் செல்வக்குமார் முன்னிலையில் விளையாட்டுத்துறைசார்பில் மணத்தி எட்வின், ராஜ்குமார் மற்றும் கோடைகால பயிற்சிமுகாம் ஒருங்கிணைப்பாளர் அர்ஜுனா விருதுபெற்ற கபாடி அணிவீரர் மணத்தி கணேசன் ஊழியர்கள் செய்திருந்தனர். 


மக்கள் கருத்து


மக்கள் பதிவு செய்யும் கருத்துகள் தணிக்கையின்றி பிரசுரமாகும் வகையில் மென்பொருள் வடிவமைக்கப்பட்டுள்ளது. தொழில்நுட்ப குறைபாடுகள் காரணமாக கருத்துக்கள் பதிவாவதில் சிறிது காலதாமதம் ஏற்பட வாய்ப்புள்ளது. வாசகர்களின் கருத்துக்களுக்கு நிர்வாகம் பொறுப்பாக மாட்டார்கள். நாகரீகமற்ற மற்றும் பிறர் மனதை புண்படுத்தகூடிய கருத்துகளை / வார்த்தைகளைப் பயன்படுத்துவதை தவிர்க்கும்படி கேட்டுக்கொள்கிறோம்.

ஆங்கிலத்தில் தட்டச்சு செய்ய Ctrl+G -ஐ அழுத்தவும்.மேலும் தொடரும் செய்திகள்

Sponsored AdsSterlite Industries (I) Ltd
Tirunelveli Business Directory