» செய்திகள் - விளையாட்டு » மாவட்ட செய்தி (திருநெல்வேலி)

சிறுமியை விபச்சாரத்தில் ஈடுபடுத்திய தாய் கைது : மேலும் மூன்று பேருக்கு போலீஸ் வலை

வியாழன் 17, மே 2018 11:41:20 AM (IST)

தென்காசி அருகே உள்ள புளியரையில் கள்ளக்காதலனுடன் சேர்ந்து 13 வயது மகளை விபச்சாரத்தில் ஈடுபடுத்திய தாய் உட்பட இருவரை போலீசார் கைது செய்தனர். மேலும் அந்த அந்த தாயின் கள்ளக்காதலன் உட்பட 3 பேரை வலை வீசி தேடி வருகின்றனர். 

தென்காசியை அடுத்த புளியரை மேற்கு தொடர்ச்சி மலை அடிவாரத்தில் ஸ்ரீ மூலப்பேரி நீர்தேக்கம் உள்ளது. அதன் அருகில் கேரள மாநிலத்தை சேர்ந்த சைகால் என்பவருக்கு சொந்தமான தோட்டம் உள்ளது. இந்த தோட்டத்தை புளியரையை சேர்ந்த மாரியப்பன் என்பவர் குத்தகைக்கு எடுத்து விவசாயம் செய்து வருகிறார். இந்த தோட்டத்தில் கேரள மாநிலம் ஆரியங்காவு பகுதியை சேர்ந்த கிரிஜா ( 42), அஜித் ( 38) ஆகிய இருவரும் தங்கியிருந்து வேலை பார்த்தனர். கிரிஜாவின் 13 வயது மகள் திருவனந்தபுரத்தில் ஒரு பள்ளி விடுதியில் தங்கியிருந்து 8 ம் வகுப்பு படித்து வந்தார். 

இந்நிலையில் பள்ளி விடுமுறை விடப்பட்டதால் அச்சிறுமி தனது தாயுடன் புளியரை பகுதியில் உள்ள தோட்டத்தில் வந்து தங்கியுள்ளார்.இந்நிலையில் கிரிஜா தனது மகளையும், தன்னுடன் வசித்து வந்த அஜித்தையும் காணவில்லை என புளியரை காவல் நிலையத்தில் புகார் செய்தார். போலீசார் விசாரணை நடத்தியதில் கிரிஜாவின் வீட்டில் இருந்த அஜித் தான் கிரிஜாவின் மகளை கேரளாவிற்கு கடத்தி சென்றுள்ளது தெரிவந்தது. உடனடியாக கிரிஜா இந்த சம்பவம் தொடர்பாக கேரள மாநிலம் தென்மலை காவல் நிலையத்தில் புகார் செய்தார். 

தென்மலை போலீசார் இந்த புகார் தொடர்பாக தீவிர விசாரணை நடத்தி அஜித் மற்றும் அவர் கடத்தி வந்த 13 வயது மாணவியையும் தீவிரமாக தேடிவந்தனர். இந்நிலையில் கிரிஜா தென்மலை காவல் நிலையத்திற்கு சென்று காணாமல் போன தனது மகளும், அஜித்தும் திரும்பி வந்துவிட்டதாகவும் எனவே அந்த புகார் மனுவை திரும்ப பெற்றுக்கொள்ள போவதாகவும் கூறியுள்ளார்.இதில் சந்தேகம் அடைந்த தென்மலை காவல் நிலைய இன்ஸ்பெக்டர் சுதிர், கிரிஜா, அவரது மகள், இவர்களுடன் வந்த சஜி ஆகிய 3 பேர்களையும் தனித்தனியாக வைத்து அவர்களிடம் தீவிர விசாரணை நடத்தியுள்ளார். இதில் பல்வேறு திடுக்கிடும் உண்மைகள் வெளிவந்துள்ளது. அதாவது விசாரணையில் கிரிஜாவும் அஜித்தும் கணவன் மனைவி அல்ல என்பதும் அவர்கள் இருவரும் கள்ளக்காதலர்கள் என்பதும் தெரியவந்தது. 

மேலும் விசாரணையில் கிரிஜா தனது கணவருடன் கேரளாவில் உள்ள ஒரு தோட்டத்தில் தங்கியிருந்து கூலி வேலை பார்த்துள்ளார். அப்போது அதே தோட்டத்தில் வேலை பார்த்து வந்த அஜித் க்கும் கிரிஜாவிற்கும் கள்ளத்தொடர்பு ஏற்பட்டுள்ளது. இந்த விஷயம் கிரிஜாவின் கணவருக்கு தெரிந்ததும். கிரிஜா, அஜித் இருவரும் அங்கிருந்து வெளியேறி புளியரை பகுதியில் உள்ள தோட்டத்தில் வேலைக்கு சேர்ந்துள்ளனர். அப்போது அவர்கள் இருவரும் கணவன் மனைவி என்று கூறியுள்ளனர்;. அப்போது கிரிஜா தனது மகளையும் தன்னுடன் அழைத்து வந்துவிட்டார். அதன்பின் கிரிஜா தனது  கள்ளக்காதலுக்கு தனது மகள் இடையூறாக இருந்ததால் அவரை கேரள மாநிலம் திருவனந்தபுரத்தில் உள்ள ஒரு விடுதியில் சேர்த்து அங்கு தங்கியிருந்து படிக்க ஏற்பாடு செய்துள்ளார். 

இந்நிலையில் பள்ளி விடுமுறைக்கு அந்த மாணவி தனது தாய் தங்கியுள்ள புளியரை தோட்டத்திற்கு வந்துள்ளார். அப்போது கிரிஜாவும், அஜித்தும் அந்த மாணவியை விபச்சாரத்தில் ஈடுபடுத்த திட்டமிட்டுள்ளனர். அதன்படி அந்த தோட்டத்தில் வைத்து பலபேர்களுடன் உல்லாசமாக இருக்குமாறு வற்புறுத்தியுள்ளனர்;. அதனை தொடர்ந்து பல்வேறு இடங்களுக்கும் அந்த மாணவியை அழைத்து சென்று விடுதிகளிலும், பல வீடுகளிலும் வைத்து விபச்சாரத்தில் ஈடுபடுத்தியுள்ளனர்.இந்நிலையில்; அஜித் கிரிஜாவிற்கு தெரியாமல் அந்த மாணவியை விபச்சாரத்தில் ஈடுபடுத்த கேரளாவிற்கு அழைத்து சென்றுள்ளார். தனக்கு தெரியாமல் தனது மகளை விபச்சாரத்தில் ஈடுபடுத்த கேரளாவிற்கு அழைத்து சென்றதால் ஆத்திரம் அடைந்த கிரிஜா தென்மலை காவல் நிலையத்தில் புகார் செய்ததாகவும் விசாரணையில் தெரியவந்தது. 

உடனடியாக கிரிஜா அளித்த வாக்கு மூலத்தின் அடிப்படையில் தென்மலை காவல்நிலைய இன்ஸ்பெக்டர் சுதிர், சப்இன்ஸ்பெக்டர் பிரேம்லால் ஆகியோர் 13 வயது மகளை விபச்சாரத்தில் ஈடுபடுத்தியதாக கிரிஜா மற்றும் அவருக்கு உடந்தையாக இருந்த சஜி என்பவரையும் கைது செய்தனர்.மேலும் கிரிஜாவின் கள்ளக்காதலன் அஜித், மற்றும் அவருக்கு உடந்தையாக இருந்த புளியரை பகுதியை சேர்ந்த ஐயப்பன், கருப்பசாமி ஆகியோரை வலை வீசி தேடிவருகின்றனர். இந்த சம்பவம் புளியரை பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.


மக்கள் கருத்து


மக்கள் பதிவு செய்யும் கருத்துகள் தணிக்கையின்றி பிரசுரமாகும் வகையில் மென்பொருள் வடிவமைக்கப்பட்டுள்ளது. தொழில்நுட்ப குறைபாடுகள் காரணமாக கருத்துக்கள் பதிவாவதில் சிறிது காலதாமதம் ஏற்பட வாய்ப்புள்ளது. வாசகர்களின் கருத்துக்களுக்கு நிர்வாகம் பொறுப்பாக மாட்டார்கள். நாகரீகமற்ற மற்றும் பிறர் மனதை புண்படுத்தகூடிய கருத்துகளை / வார்த்தைகளைப் பயன்படுத்துவதை தவிர்க்கும்படி கேட்டுக்கொள்கிறோம்.

ஆங்கிலத்தில் தட்டச்சு செய்ய Ctrl+G -ஐ அழுத்தவும்.மேலும் தொடரும் செய்திகள்

Sponsored Ads


Sterlite Industries (I) Ltd

Tirunelveli Business Directory