» செய்திகள் - விளையாட்டு » மாவட்ட செய்தி (திருநெல்வேலி)

களக்காட்டில் மணல் கடத்த முயன்ற 9 பேர் கைது

வியாழன் 17, மே 2018 5:41:01 PM (IST)

களக்காட்டில் மணல் கடத்த முயன்ற 9 பேர் கைது செய்யப்பட்டனர்.

களக்காடு பகுதியிலுள்ள பச்சையாற்றில் ஆற்று மணல் கடத்தப்படுவதாக போலீசாருக்கு ரகசிய தகவல் கிடைத்தது. இதையடுத்து போலீசார் ரோந்து பணியில் ஈடுபட்டனர். கீழ தேவநல்லூர் பகுதியில் 2 லாரிகளில் சிலர் மணலை கடத்த முயன்றனர்.போலீசார் வருவதை பார்த்ததும் அந்த நபர்கள் அங்கிருந்து தப்பியோட முயன்ற போது கடத்தலில் ஈடுபட்ட சிதம்பராபுரத்தை சேர்ந்த சரவணன் (36), சிவசங்கர் (39), செல்வராஜ் (29), முருகன் (33), மதன் (30), கண்ணன் (42), சேதுராயபுரம் கிருஷ்ணகுமார் (35), மாவடி புதூர் சேர்மபாண்டி (34), ராமகிருஷ்ணாபுரம் ராஜேஷ் (34) ஆகிய 9 பேரை போலீசார் கைது செய்து  2 லாரிகளை பறிமுதல் செய்தனர்.


மக்கள் கருத்து


மக்கள் பதிவு செய்யும் கருத்துகள் தணிக்கையின்றி பிரசுரமாகும் வகையில் மென்பொருள் வடிவமைக்கப்பட்டுள்ளது. தொழில்நுட்ப குறைபாடுகள் காரணமாக கருத்துக்கள் பதிவாவதில் சிறிது காலதாமதம் ஏற்பட வாய்ப்புள்ளது. வாசகர்களின் கருத்துக்களுக்கு நிர்வாகம் பொறுப்பாக மாட்டார்கள். நாகரீகமற்ற மற்றும் பிறர் மனதை புண்படுத்தகூடிய கருத்துகளை / வார்த்தைகளைப் பயன்படுத்துவதை தவிர்க்கும்படி கேட்டுக்கொள்கிறோம்.

ஆங்கிலத்தில் தட்டச்சு செய்ய Ctrl+G -ஐ அழுத்தவும்.



மேலும் தொடரும் செய்திகள்

Sponsored Ads


Sterlite Industries (I) Ltd





Tirunelveli Business Directory