» செய்திகள் - விளையாட்டு » மாவட்ட செய்தி (திருநெல்வேலி)

சாலை மறியல் விசைத்தறி தொழிலாளர்கள் கைது

வியாழன் 17, மே 2018 6:23:59 PM (IST)

சங்கரன்கோவிலில், 60 சதவீத கூலி உயர்வு கேட்டு குடும்பத்துடன் சாலை மறியலில் ஈடுபட்ட விசைத்தறி தொழிலாளர்கள் 300-க்‍கும் மேற்பட்டோர் கைது செய்யப்பட்டனர்.

திருநெல்வேலி மாவட்டம் சங்கரன்கோவிலில் செயல்படும் சுமார் 5 ஆயிரம் விசைத்தறி கூடங்களில், 15 ஆயிரத்திற்கும் மேற்பட்ட விசைத்தறி தொழிலாளர்கள் பணியாற்றி வருகின்றனர். 2 ஆண்டுகளுக்‍கு ஒரு முறை ஊதிய உயர்வு வழங்கப்பட வேண்டிய நிலையில், ஊதிய உயர்வு வழங்கப்படாததால் தொழிலாளர்கள் பல கட்ட போராட்டங்களை நடத்தி வருகின்றனர்.  

60 சதவீத கூலி உயர்வு கேட்டும், பண்டிகைக்‍காலங்களில் 300 ரூபாய் ஊதியம் வழங்கவேண்டும் என்பன உள்ளிட்ட கோரிக்‍கைகளை வலியுறுத்தி, சங்கரன்கோவில் பேருந்து நிலையம் முன்பு, குடும்பத்தினருடன் சாலை மறியல்​போராட்டத்தில் ஈடுபட்டனர். இந்த போராட்டத்தால் அரை மணி நேரம் போக்‍குவரத்து பாதிக்‍கப்பட்டது. மறியலில் ஈடுபட்ட பெண்கள் உள்ளிட்ட 300 பேரை போலீசார் கைது செய்தனர்.


மக்கள் கருத்து


மக்கள் பதிவு செய்யும் கருத்துகள் தணிக்கையின்றி பிரசுரமாகும் வகையில் மென்பொருள் வடிவமைக்கப்பட்டுள்ளது. தொழில்நுட்ப குறைபாடுகள் காரணமாக கருத்துக்கள் பதிவாவதில் சிறிது காலதாமதம் ஏற்பட வாய்ப்புள்ளது. வாசகர்களின் கருத்துக்களுக்கு நிர்வாகம் பொறுப்பாக மாட்டார்கள். நாகரீகமற்ற மற்றும் பிறர் மனதை புண்படுத்தகூடிய கருத்துகளை / வார்த்தைகளைப் பயன்படுத்துவதை தவிர்க்கும்படி கேட்டுக்கொள்கிறோம்.

ஆங்கிலத்தில் தட்டச்சு செய்ய Ctrl+G -ஐ அழுத்தவும்.மேலும் தொடரும் செய்திகள்

Sponsored AdsTirunelveli Business Directory