» செய்திகள் - விளையாட்டு » மாவட்ட செய்தி (திருநெல்வேலி)

காங்கிரஸ் கட்சி கருப்புதுணி கட்டி ஆர்ப்பாட்டம்

வியாழன் 17, மே 2018 7:51:50 PM (IST)

கர்நாடகாவில் பாஜக ஆட்சி அமைத்ததை கண்டித்து நெல்லை கொக்கிரகுளத்தில் உள்ள காங்கிரஸ் அலுவலகம் முன்பு காங்கிரசார் கருப்பு துணி கட்டி ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.

பலத்த எதிர்பார்ப்புகளுக்கிடையே நேற்று முன்தினம் கர்நாடக மாநில சட்டப்பேரவை முடிவுகள் வெளியானது.இதில் எந்த கட்சிக்கும் பெரும்பான்மை கிடைக்காததால் ஆட்சியமைப்பதில் காங்கிரஸ் மற்றும் பாஜக இடையே பலத்த போட்டி நிலவியது.இதில் காங்கிரஸ் மற்றும் மதசார்பற்ற ஜனதாதளம் இ்டை யே உடன்பாடு ஏற்பட்டு ஆட்சியமைக்க உரிமை கோரினார்.

ஆனால் இன்று பாஜக சார்பில் எடியூரப்பா முதல்வராக பதவியேற்றார். இந்நிலையில் கர்நாடகாவில் பாஜக ஆட்சி அமைத்ததை கண்டித்து நெல்லை கொக்கிரகுளத்தில் உள்ள காங்கிரஸ் அலுவலகம் முன்பு காங்கிரசார் கண்களில் கருப்பு துணி கட்டி ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.


மக்கள் கருத்து


மக்கள் பதிவு செய்யும் கருத்துகள் தணிக்கையின்றி பிரசுரமாகும் வகையில் மென்பொருள் வடிவமைக்கப்பட்டுள்ளது. தொழில்நுட்ப குறைபாடுகள் காரணமாக கருத்துக்கள் பதிவாவதில் சிறிது காலதாமதம் ஏற்பட வாய்ப்புள்ளது. வாசகர்களின் கருத்துக்களுக்கு நிர்வாகம் பொறுப்பாக மாட்டார்கள். நாகரீகமற்ற மற்றும் பிறர் மனதை புண்படுத்தகூடிய கருத்துகளை / வார்த்தைகளைப் பயன்படுத்துவதை தவிர்க்கும்படி கேட்டுக்கொள்கிறோம்.

ஆங்கிலத்தில் தட்டச்சு செய்ய Ctrl+G -ஐ அழுத்தவும்.மேலும் தொடரும் செய்திகள்

Sponsored Ads
Sterlite Industries (I) LtdTirunelveli Business Directory