» செய்திகள் - விளையாட்டு » மாவட்ட செய்தி (திருநெல்வேலி)

இறந்ததாக நினைத்த குழந்தை உயிர் பிழைத்தது : சுரண்டையில் நடைபெற்ற அதிசயம்

சனி 19, மே 2018 10:26:27 AM (IST)

சுரண்டையில் இறந்ததாக நினைத்த குழந்தை திடீரென உயிர் பிழைத்தது. இதனால் குழந்தையின் உறவினர்கள் மகிழ்ச்சியடைந்தனர்.

கீழப்பாவூரை  சேர்ந்த வேலம்மாள் (25).இவர் பிரசவத்திற்காக சுரண்டையி லுள்ள தனியார் மருத்துவமனையில்  சேர்ந்தார். நேற்று அவருக்கு ஆண் குழந்தை பிறந்தது.ஆனால் சிறிது நேரத்திலேயே மருத்துவர்கள் குழந்தை இறந்து விட்டது  எனக் கூறியுள்ளார்.  குழந்தை இறந்து விட்டதை நினைத்து உறவினர்கள் இறுதி சடங்கு செய்ய முயன்றனர்.

அவர்களது சமுதாய வழக்கப்படி காது குத்தி அடக்கம் செய்ய  நகை கடையில் உள்ள ஒருவரை அழைத்து குழந்தைக்கு காது குத்தும் போது குழந்தை திடீரென அழுதது உறவினர்கள் உடனடியாக தென்காசி அரசு மருத்துவமனைக்கு தகவல் தெரிவிக்க  குழந்தையை மயானத்தில் இருந்து எடுத்து வந்த முதலுதவி அளித்தனர் தென்காசி சிகிச்சைமுடிந்து மேல் சிகிச்சைக்காக பாளை அரசு மருத்துவமனைக்கு குழந்தையை அனுப்பி வைத்தனர்.இதனால் சோகத்தில் இருந்தவர்கள் சந்தோஷம் அடைந்துள்ளனர்.


மக்கள் கருத்து


மக்கள் பதிவு செய்யும் கருத்துகள் தணிக்கையின்றி பிரசுரமாகும் வகையில் மென்பொருள் வடிவமைக்கப்பட்டுள்ளது. தொழில்நுட்ப குறைபாடுகள் காரணமாக கருத்துக்கள் பதிவாவதில் சிறிது காலதாமதம் ஏற்பட வாய்ப்புள்ளது. வாசகர்களின் கருத்துக்களுக்கு நிர்வாகம் பொறுப்பாக மாட்டார்கள். நாகரீகமற்ற மற்றும் பிறர் மனதை புண்படுத்தகூடிய கருத்துகளை / வார்த்தைகளைப் பயன்படுத்துவதை தவிர்க்கும்படி கேட்டுக்கொள்கிறோம்.

ஆங்கிலத்தில் தட்டச்சு செய்ய Ctrl+G -ஐ அழுத்தவும்.மேலும் தொடரும் செய்திகள்

Sponsored Ads


Sterlite Industries (I) Ltd

Tirunelveli Business Directory