» செய்திகள் - விளையாட்டு » மாவட்ட செய்தி (திருநெல்வேலி)

எல்ஐசி முகவர்களுக்கு சேமநிதி வழங்க கோரிக்கை

செவ்வாய் 12, ஜூன் 2018 5:50:41 PM (IST)

கேரளாவை போல் தமிழ்நாட்டிலும் எல்.ஐ.சி. முகவர்களுக்கு சேமநல நிதி வழங்க வேண்டும் என கோரி நெல்லையில் எல்.ஐ.சி முகவர் (சங்கம் லிக்காய் )  ஆர்ப்பாட்டம் நடத்தியது.

எல்.ஐ.சி. முகவர்களுக்கு மாதம் ரூ.18ஆயிரம் சம்பளம் வழங்கிட வேண்டும்,ஐ.ஆர்.டி.ஏ பரிந்துரை செய்த கமிஷனை முகவர்களுக்கு வழங்கிட வேண்டும், கேரளாவை போல் தமிழ்நாட்டிலும் எல்.ஐ.சி. முகவர்களுக்கு சேமநல நிதி வழங்க வேண்டும்.குரூப் இன்சூரன்ஸ் வயது வரம்பை நீக்கிட வேண்டும் போன்ற கோரிக்கைகளை வலியுறுத்தி பாளை எல்.ஐ.சி. கோட்ட அலுவலக வளாகத்தில் லிக்காய் சங்கம் ஆர்ப்பாட்டம் நடத்தியது .

ஆர்ப்பாட்டத்திற்கு சங்க கோட்ட தலைமை நிலைய செயலாளர் பால சுப்பிரமணியன் தலைமை தாங்கினார் , கோட்ட தலைவர் கே.நடராசன் ஆர்ப்பாட்டத்தை துவக்கி வைத்து பேசினார் , கோட்ட பொது செயலாளர் குழந்தைவேலு நிறைவுரையாற்றினார்.ஆர்ப்பாட்டத்தில் சண்முகவேல், வெங்கடேஷ்,செல்லத்துரை,லெட்சுமிநாராயணன், சாந்தாராம், நவநீதன் ,கணபதி, ஆழ்வார் உட்பட ஏராளாமானோர் கலந்து கொண்டனர்.


மக்கள் கருத்து


மக்கள் பதிவு செய்யும் கருத்துகள் தணிக்கையின்றி பிரசுரமாகும் வகையில் மென்பொருள் வடிவமைக்கப்பட்டுள்ளது. தொழில்நுட்ப குறைபாடுகள் காரணமாக கருத்துக்கள் பதிவாவதில் சிறிது காலதாமதம் ஏற்பட வாய்ப்புள்ளது. வாசகர்களின் கருத்துக்களுக்கு நிர்வாகம் பொறுப்பாக மாட்டார்கள். நாகரீகமற்ற மற்றும் பிறர் மனதை புண்படுத்தகூடிய கருத்துகளை / வார்த்தைகளைப் பயன்படுத்துவதை தவிர்க்கும்படி கேட்டுக்கொள்கிறோம்.

ஆங்கிலத்தில் தட்டச்சு செய்ய Ctrl+G -ஐ அழுத்தவும்.மேலும் தொடரும் செய்திகள்

Sponsored Ads
Sterlite Industries (I) LtdTirunelveli Business Directory