» செய்திகள் - விளையாட்டு » மாவட்ட செய்தி (திருநெல்வேலி)

முறப்பநாட்டில் தீக்குளித்த கணவன்,மனைவி சாவு

செவ்வாய் 12, ஜூன் 2018 6:20:32 PM (IST)

முறப்பநாட்டில் கணவன் மது அருந்தும் பிரச்சனையால் தீக்குளித்த கணவன், அருகிலிருந்த மனைவி ஆகியோர் பாளை.,ஹைகிரவுண்ட் ஆஸ்பத்திரியில் பரிதாபமாக உயிரிழந்தனர்.

துாத்துக்குடி மாவட்டம் முறப்பநாடு திருவேங்கடபுரத்தை சேர்ந்த சங்கரன் (38).டிரைவராக உள்ளார்.இவரது மனைவி அன்னரத்தினம் (22).இத்தம்பதிக்க்கு இரு பெண் குழந்தைகள் உள்ளனர்.சங்கரன்க்கு குடிப்பழக்கம் இருந்ததாம். இதனால்  அடிக்கடி குடித்து விட்டு வீட்டிற்கு வந்ததால் அன்னரத்தினம் குடிப்பழக்கம் குறித்து கணவரை கண்டித்துள்ளார்.

இதனால் விரக்தியடைந்த சங்கரன் நேற்று நள்ளிரவு தனது உடலில் மண் ணெண்ணெய் ஊற்றி தீ வைத்துள்ளார்.அதை தடுக்க சென்ற மனைவியை கட்டிபிடித்ததில் அவருக்கும் தீக்காயம் ஏற்பட்டது.தொடர்ந்து பாளை.,அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட இருவரும் சிகிச்சை பலனின்றி உயிரிழந்தனர்.இச்சம்பவம் குறித்து முறப்பநாடு போலீசார் விசாரித்து வருகின்றனர்.


மக்கள் கருத்து


மக்கள் பதிவு செய்யும் கருத்துகள் தணிக்கையின்றி பிரசுரமாகும் வகையில் மென்பொருள் வடிவமைக்கப்பட்டுள்ளது. தொழில்நுட்ப குறைபாடுகள் காரணமாக கருத்துக்கள் பதிவாவதில் சிறிது காலதாமதம் ஏற்பட வாய்ப்புள்ளது. வாசகர்களின் கருத்துக்களுக்கு நிர்வாகம் பொறுப்பாக மாட்டார்கள். நாகரீகமற்ற மற்றும் பிறர் மனதை புண்படுத்தகூடிய கருத்துகளை / வார்த்தைகளைப் பயன்படுத்துவதை தவிர்க்கும்படி கேட்டுக்கொள்கிறோம்.

ஆங்கிலத்தில் தட்டச்சு செய்ய Ctrl+G -ஐ அழுத்தவும்.



மேலும் தொடரும் செய்திகள்

Sponsored Ads






Tirunelveli Business Directory