» செய்திகள் - விளையாட்டு » மாவட்ட செய்தி (திருநெல்வேலி)

குற்றாலத்தில் களைகட்டும் சீசன் சவாரிக்கு ஏங்கும் படகு குழாம்

செவ்வாய் 12, ஜூன் 2018 6:49:53 PM (IST)

குற்றாலத்தில் சீசன் களை கட்டி வருகிறது.  ஐந்தருவி வெண்ணமடை குளத்தில் அமைக்கப்பட்ட படகு குழாமில் தண்ணீர் நிரம்பி படகு சவாரிக்கு தயார் நிலையில் இருக்கிறது.

அருவி குளியலுக்கு பேர் போன குற்றாலத்தில் கடந்த சில நாட்களாக தொடர்ந்து நல்ல மழை பெய்து வருவதால் மெயின் அருவி, ஐந்தருவி, சிற்றருவி, புலியருவி, பழையகுற்றால அருவி உள்ளிட்ட அனைத்து அருவிகளிலும் தண்ணீர் தாராளமாக விழுகிறது. இதனால் சுற்றுலா பயணிகள் அருவிகளில் ஆனந்தமாய் குளித்து மகிழ்கின்றனர். தற்போது சீசன் களை கட்டி வருகிறது.இதனால் சுற்றுலா பயணிகளின் கூட்டமும் நாளுக்கு நாள் அதிகரித்த வண்ணம் உள்ளது.; குற்றாலம் வருகை தரும் சுற்றுலா பயணிகளின் பொழுது போக்கிற்காக குற்றாலம் - ஐந்தருவி சாலையில் உள்ள வெண்ணமடை குளத்தில் சுற்றுலாத்துறை மூலம் படகுகுழாம் அமைக்கப்பட்டுள்ளது. இதில் சுற்றுலாப்பயணிகள் படகு சவாரி செய்வர்.

தற்போது இப்படகு குழாமில் தண்ணீர் நிரம்பி விட்டது. படகு சவாரிக்கு தயார் நிலையில் படகு குழாம் உள்ளது. சுற்றுலாத்துறையினர் விரைந்து நடவடிக்கை எடுத்து படகு குழாமில் படகு போக்குவரத்தினை துவக்க வேண்டும் என சுற்றுலாப் பயணிகள் கோரிக்கை விடுத்துள்ளனர். மேலும் குற்றாலத்தில் இருந்து ஐந்தருவி,பழையகுற்றாலத்திற்கும், தென்காசியில் இருந்து குற்றாலம், ஐந்தருவிக்கும் அரசு போக்குவரத்துக் கழகம் கூடுதல் பஸ்களை இயக்க வேண்டும் என்றும், குற்றால சீசனை முன்னிட்டு சென்னையில் இருந்து செங்கோட்டைக்கும், மதுரையில் இருந்து செங் கோட்டைக்கும், கொல்லத்தில் இருந்து தென்காசிக்கும் கூடுதல் ரயில்களை இயக்க ரயில்வே நிர்வாகம் முன்வர வேண்டும் என்றும் சுற்றுலாப் பயணிகள் கோரிக்கை விடுத்துள்ளனர்.


மக்கள் கருத்து


மக்கள் பதிவு செய்யும் கருத்துகள் தணிக்கையின்றி பிரசுரமாகும் வகையில் மென்பொருள் வடிவமைக்கப்பட்டுள்ளது. தொழில்நுட்ப குறைபாடுகள் காரணமாக கருத்துக்கள் பதிவாவதில் சிறிது காலதாமதம் ஏற்பட வாய்ப்புள்ளது. வாசகர்களின் கருத்துக்களுக்கு நிர்வாகம் பொறுப்பாக மாட்டார்கள். நாகரீகமற்ற மற்றும் பிறர் மனதை புண்படுத்தகூடிய கருத்துகளை / வார்த்தைகளைப் பயன்படுத்துவதை தவிர்க்கும்படி கேட்டுக்கொள்கிறோம்.

ஆங்கிலத்தில் தட்டச்சு செய்ய Ctrl+G -ஐ அழுத்தவும்.மேலும் தொடரும் செய்திகள்

Sponsored Ads


Tirunelveli Business Directory