» செய்திகள் - விளையாட்டு » மாவட்ட செய்தி (திருநெல்வேலி)

ராஜீவ் கொலையாளிகளை விடுதலை செய்யவேண்டும் : ஜி.ராமகிருஷ்ணன் கோரிக்கை

செவ்வாய் 12, ஜூன் 2018 7:08:38 PM (IST)

ராஜீவ்காந்தி கொலை வழக்கில் சிறை தண்டனை பெற்று வருபவர்களை விடுதலை செய்ய தமிழக அரசு ஆக்கப்பூர்வமான நடவடிக்கைகளை எடுக்க வேண்டும் என மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் தலைமை செயற்குழு உறுப்பினர் ஜி.ராமகிருஷ்ணன் கோரிக்கை விடுத்துள்ளார்.

மத்திய அரசு 100 நாள் வேலைத்திட்டத்திற்கு அதிக அளவில் நிதி ஒதுக்கீடு செய்ய வேண்டும். புதிய வேலை வாய்ப்புகளை உருவாக்க வேண்டும். கார்பரேட் நிறுவனங்களுக்கு சலுகை வழங்குவதை நிறுத்த வேண்டும். விவசாய கடன்களை முற்றிலுமாக தள்ளுபடி செய்ய வேண்டும். தலித் பெண்கள் மீதான தாக்குதல்களை நிறுத்த வேண்டும். தனியார் கல்வி நிறுவனங்களில் 25 சதவீத இடஒதுக்கீட்டை முறையாக அமுல் படுத்த வேண்டும். பொதுத்துறை நிறுவனங்களை தனியாருக்கு தாரை வார்க்க கூடாது உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி கன்னியாகுமரியில்  தொடங்கிய மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் பிரசாரப்பயணம் நெல்லை மாவட்டம் வீரவநல்லூர், அம்பாசமுத்திரம், கடையம், குற்றாலம், வழியாக தென்காசிக்கு வந்தது.

அதனை தொடர்ந்து மாலையில் தென்காசியில் பொதுக்கூட்டம் நடை பெற்றது. கூட்டத்திற்கு தென்காசி தாலுகா செயலாளர் அயூப்கான் தலைமை தாங்கினார். கூட்டத்தில் முன்னாள் மாநிலத்தலைவரும், தலைமை செயற்குழு உறுப்பினருமான ஜி.ராமகிருஷ்ணன் சிறப்புரை ஆற்றினார். மாவட்ட செயலாளர் முத்துப்பாண்டி, பாஸ்கரன், ஜோதிராம், பொன்னுத்தாய், நூர்முகம்மது, உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர். அதனை தொடர்ந்து ஜி.ராமகிருஷ்ணன் செயதியாளர்களிடம் கூறியதாவது :- மத்திய அரசின் பொருளாதாரக் கொள்கையால் 4 ஆண்டுகளாக விவசாயம் உள்ளிட்ட தொழில் வளர்ச்சி கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளது.

தூத்துக்குடி துப்பாக்கி சூடு சம்பவத்திற்கு சிபிஐ விசாரணை வேண்டும். ராஜீவ்காந்தி கொலை வழக்கில் சிறையில் உள்ள பேரறிவாளன், முருகன், சாந்தன், நளினி உள்ளிட்டோரை விடுதலை செய்ய தமிழக அரசு உரிய நடவடிக்கை மேற்கொள்ள வேண்டும்.தற்போது நடைபெற்று வரும் ஜாக்டோ ஜியோ போராட்டத்திற்கு முற்றுப்புள்ளி வைக்க போராட்டக்காரர்களை தமிழக அரசு அழைத்து பேச்சுவார்த்தை நடத்த வேண்டும். ஓய்வு பெற்ற போக்குவரத்து தொழிலாளர்களுக்கு உடனடியாக நிலுவைத் தொகையை வழங்கிட வேண்டும். இவ்வாறு அவர் கூறினார்.


மக்கள் கருத்து


மக்கள் பதிவு செய்யும் கருத்துகள் தணிக்கையின்றி பிரசுரமாகும் வகையில் மென்பொருள் வடிவமைக்கப்பட்டுள்ளது. தொழில்நுட்ப குறைபாடுகள் காரணமாக கருத்துக்கள் பதிவாவதில் சிறிது காலதாமதம் ஏற்பட வாய்ப்புள்ளது. வாசகர்களின் கருத்துக்களுக்கு நிர்வாகம் பொறுப்பாக மாட்டார்கள். நாகரீகமற்ற மற்றும் பிறர் மனதை புண்படுத்தகூடிய கருத்துகளை / வார்த்தைகளைப் பயன்படுத்துவதை தவிர்க்கும்படி கேட்டுக்கொள்கிறோம்.

ஆங்கிலத்தில் தட்டச்சு செய்ய Ctrl+G -ஐ அழுத்தவும்.மேலும் தொடரும் செய்திகள்

Sponsored Ads


Sterlite Industries (I) LtdTirunelveli Business Directory