» செய்திகள் - விளையாட்டு » மாவட்ட செய்தி (திருநெல்வேலி)

தென்காசியில் சாலைப்பணியாளர்கள் நூதன போராட்டம்

செவ்வாய் 12, ஜூன் 2018 7:21:58 PM (IST)


தென்காசியில் பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி தமிழ்நாடு நெடுஞ்சாலைத்துறை பணியாளர் சங்கத்தினர் கருப்பு கொடியேந்தி சங்கு ஊதி நூதனப் போராட்டத்தில் ஈடுபட்டனர்.

சாலைப்பணியாளர்களின் 41 மாத பணிநீக்க காலத்தை பணிகாலமாக அறிவித்து பணபலன்களை வழங்க வேண்டும். சாலை பணியாளர்களுக்கு தொழில்நுட்ப கல்வித்திறன் பெறாத ஊழியர்களுக்கு இணையான ஊதியம் 5200 – 20.200, தர ஊதியம் 1900 வழங்க வேண்டும். சாலைப் பணியாளர்களுக்கு மாத ஊதியம் கருவூலம் மூலம் நிரந்தர ஊதியத் தொகுப்பிலிருந்து ஊதியம் வழங்க வேண்டும்.நெடுஞ்சாலை பராமரிப்பு பணிகளை தனியாரிடம் வழங்கும் முடிவை தமிழக அரசு கைவிட வேண்டும் உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி தென்காசியில் நெடுஞ்சாலைத்துறை பணியாளர் சங்கத்தினர் கருப்பு கொடியேந்தி சங்கு ஊதும் போராட்டம் நடத்தினர்.

போராட்டத்திற்கு தென்காசி கோட்ட இணைத்தலைவர் அண்ணாமலை தலைமை தாங்கினார். தென்காசி கோட்ட செயலாளர் முகம்மது முஸ்தபா, ஊரக வளர்ச்சித்துறை சங்க மாவட்ட செயலாளர் சுப்பிரமணியன், ஓய்வூதியர் சங்கம் சார்பில் சலீம், சாலைப்பணியாளர் சங்க மாவட்ட துணைத்தலைவர் கோயில் பிச்சை ஆகியயோர் கோரிக்கைகளை வலியுறுத்தி பேசினர். முடிவில் கோட்ட பொருளாளர் சேகர் நன்றி கூறினார்.


மக்கள் கருத்து


மக்கள் பதிவு செய்யும் கருத்துகள் தணிக்கையின்றி பிரசுரமாகும் வகையில் மென்பொருள் வடிவமைக்கப்பட்டுள்ளது. தொழில்நுட்ப குறைபாடுகள் காரணமாக கருத்துக்கள் பதிவாவதில் சிறிது காலதாமதம் ஏற்பட வாய்ப்புள்ளது. வாசகர்களின் கருத்துக்களுக்கு நிர்வாகம் பொறுப்பாக மாட்டார்கள். நாகரீகமற்ற மற்றும் பிறர் மனதை புண்படுத்தகூடிய கருத்துகளை / வார்த்தைகளைப் பயன்படுத்துவதை தவிர்க்கும்படி கேட்டுக்கொள்கிறோம்.

ஆங்கிலத்தில் தட்டச்சு செய்ய Ctrl+G -ஐ அழுத்தவும்.மேலும் தொடரும் செய்திகள்

Sponsored Ads
Sterlite Industries (I) LtdTirunelveli Business Directory