» செய்திகள் - விளையாட்டு » மாவட்ட செய்தி (திருநெல்வேலி)

கிணற்றில் தவறிவிழுந்த இளைஞர் பரிதாப சாவு

புதன் 13, ஜூன் 2018 11:39:10 AM (IST)

ஊத்துமலை அருகே கிணற்றில் தவறி விழுந்த இளைஞர் பரிதாபமாக உயிரிழந்தார்.

திருநெல்வேலி மாவட்டம் ஊத்துமலை அருகே வென்னிவாசபுரம் கிராமத்தை சேர்ந்தவர் முத்துக்குமார் (26).ஆடு மேய்க்கும் தொழிலாளி.இவர் சம்பவத்தன்று ஆடுகளுக்கு தனது ஊரில் கிணற்றின் அருகே உள்ள மரத்தில் குலை பறித்து கொண்டிருந்தாராம்.அப்போது நிலை தடுமாறிய அவர் கிணற்றிற்குள் விழுந்து பரிதாபமாக உயிரிழந்தாராம்.இவரை காணாமல் அவரது குடும்பத்தினர் தேடிய போது கிணற்றிற்குள் அவரது சடலம் கிடப்பதுதெரிய வந்தது.உடனே அதை மீட்ட ஊத்துமலை போலீசார் இறந்தவர் உடலை பிரேத பரிசோதனைக்கு அனுப்பி வைத்து விசாரித்து வருகின்றனர்.


மக்கள் கருத்து


மக்கள் பதிவு செய்யும் கருத்துகள் தணிக்கையின்றி பிரசுரமாகும் வகையில் மென்பொருள் வடிவமைக்கப்பட்டுள்ளது. தொழில்நுட்ப குறைபாடுகள் காரணமாக கருத்துக்கள் பதிவாவதில் சிறிது காலதாமதம் ஏற்பட வாய்ப்புள்ளது. வாசகர்களின் கருத்துக்களுக்கு நிர்வாகம் பொறுப்பாக மாட்டார்கள். நாகரீகமற்ற மற்றும் பிறர் மனதை புண்படுத்தகூடிய கருத்துகளை / வார்த்தைகளைப் பயன்படுத்துவதை தவிர்க்கும்படி கேட்டுக்கொள்கிறோம்.

ஆங்கிலத்தில் தட்டச்சு செய்ய Ctrl+G -ஐ அழுத்தவும்.மேலும் தொடரும் செய்திகள்

Sponsored AdsSterlite Industries (I) Ltd
Tirunelveli Business Directory