» செய்திகள் - விளையாட்டு » மாவட்ட செய்தி (திருநெல்வேலி)

மோட்டார்பைக்கும் மினிவேனும் மோதிய விபத்து : இளைஞர் சாவு இரண்டு பேர் படுகாயம்

புதன் 13, ஜூன் 2018 12:33:11 PM (IST)

மோட்டார்பைக்கும் மினிவேனும் மோதி விபத்துக்குள்ளானதில் பைக்கில் சென்ற ஒரு வாலிபர் பலியானார்.மற்ற இருவர் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகின்றனர்.

திருநெல்வேலி மாவட்டம் கல்லிடைக்குறிச்சி அருகே வைராவிகுளத்தை சேர்ந்தவர் பிரான்சிஸ் (22).இவரது நண்பர்கள் தெற்கு பாப்பான்குளம் இந்திரா காலனியை சேர்ந்த வேல்முருகன்(19) மற்றும் அதே பகுதியை சேர்ந்த மாரிமுத்து (19).சம்பவத்தன்று இவர்கள் மூன்று பேரும் ஒரு பைக்கில் ஆம்பூரில் உள்ள பிரான்சிஸ் உடைய உறவினர் வீட்டிற்கு சென்றுள்ளனர்.பைக்கை பிரான்சிஸ் ஓட்டியுள்ளார்.

அப்போது அம்பாசமுத்திரம் திருநெல்வேலி சாலையில் செல்லும் போது எதிரே வந்த மினிவேனும் மோட்டார்பைக்கும் மோதியது.இதில் சம்பவஇடத்திலேயே பிரான்சிஸ் உயிரிழந்தார்.மற்ற இருவரும் படுகாயமடைந்து திருநெல்வேலி அரசு மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகிறார்.இச்சம்பவம் குறித்து போலீசார் வழக்குபதிந்து விசாரித்து வருகின்றனர்.


மக்கள் கருத்து


மக்கள் பதிவு செய்யும் கருத்துகள் தணிக்கையின்றி பிரசுரமாகும் வகையில் மென்பொருள் வடிவமைக்கப்பட்டுள்ளது. தொழில்நுட்ப குறைபாடுகள் காரணமாக கருத்துக்கள் பதிவாவதில் சிறிது காலதாமதம் ஏற்பட வாய்ப்புள்ளது. வாசகர்களின் கருத்துக்களுக்கு நிர்வாகம் பொறுப்பாக மாட்டார்கள். நாகரீகமற்ற மற்றும் பிறர் மனதை புண்படுத்தகூடிய கருத்துகளை / வார்த்தைகளைப் பயன்படுத்துவதை தவிர்க்கும்படி கேட்டுக்கொள்கிறோம்.

ஆங்கிலத்தில் தட்டச்சு செய்ய Ctrl+G -ஐ அழுத்தவும்.மேலும் தொடரும் செய்திகள்

Sponsored Ads


Tirunelveli Business Directory