» செய்திகள் - விளையாட்டு » மாவட்ட செய்தி (திருநெல்வேலி)

டாஸ்மாக் சூபர்வைசரை மிரட்டி பணம் கொள்ளை

புதன் 13, ஜூன் 2018 1:03:38 PM (IST)

நாங்குநேரி அருகே டாஸ்மாக் சூபர்வைசரை மிரட்டி பணம் கொள்ளை யடிக்கப்பட்டுள்ளது.

நெல்லை மாவட்டம் நாங்குநேரி அருகே தட்டான்குளத்தில் உள்ள டாஸ்மாக் கடை சூபர்வைசராக சுரேஷ் மற்றும் சேல்ஸ்மேனாக பாண்டியும் வேலை பார்த்து வருகிறார்கள்.சம்பவத்தன்று இரவு இருவரும் கடையை மூடி விட்ட வசூல்பணத்துடன் சென்று கொண்டிருந்தனர்.அப்போது அவர்களை வழிமறித்த மர்ம நபர்கள் அவர்கள் இருவரையும் அரிவாளை காட்டி மிரட்டி ரூபாய் 1லட்சத்து ஐம்பத்தொன்பதாயிரத்தை கொள்ளையடித்து சென்றனர்.இது குறித்து புகாரின் பேரில் நாங்குநேரி போலீசார் விசாரித்து வருகின்றனர்.


மக்கள் கருத்து


மக்கள் பதிவு செய்யும் கருத்துகள் தணிக்கையின்றி பிரசுரமாகும் வகையில் மென்பொருள் வடிவமைக்கப்பட்டுள்ளது. தொழில்நுட்ப குறைபாடுகள் காரணமாக கருத்துக்கள் பதிவாவதில் சிறிது காலதாமதம் ஏற்பட வாய்ப்புள்ளது. வாசகர்களின் கருத்துக்களுக்கு நிர்வாகம் பொறுப்பாக மாட்டார்கள். நாகரீகமற்ற மற்றும் பிறர் மனதை புண்படுத்தகூடிய கருத்துகளை / வார்த்தைகளைப் பயன்படுத்துவதை தவிர்க்கும்படி கேட்டுக்கொள்கிறோம்.

ஆங்கிலத்தில் தட்டச்சு செய்ய Ctrl+G -ஐ அழுத்தவும்.



மேலும் தொடரும் செய்திகள்

Sponsored Ads



Sterlite Industries (I) Ltd




Tirunelveli Business Directory