» செய்திகள் - விளையாட்டு » மாவட்ட செய்தி (திருநெல்வேலி)

நெல்லை மாவட்டத்திற்கு 27 ல் உள்ளூர் விடுமுறை : ஆட்சியர் அறிவிப்பு

புதன் 13, ஜூன் 2018 2:21:45 PM (IST)

ஆனி பெருந்திருவிழாவினை முன்னிட்டு 27.06.2018 அன்று திருநெல்வேலி மாவட்டத்திற்கு உள்ளுர் விடுமுறை அளிக்கப்படுவதாக மாவட்ட ஆட்சியர் ஷில்பா பிரபாகர் சதீஷ், தகவல் தெரிவித்துள்ளார்.

இது குறித்து நெல்லை ஆட்சியர் ஷில்பா பிரபாகர் சதீஷ் வெளியிட்டுள்ள செய்திகுறிப்பில் கூறியுள்ளதாவது,திருநெல்வேலி அருள்மிகு நெல்லையப்பர் காந்திமதி அம்மன் கோவிலில் ஆனிபெருந்திருவிழா வரும் ஜூன் 27 ம் தேதி நடைபெறுவதால் அன்றைய தினம் திருநெல்வேலி மாவட்டத்திற்கு உள்ளுர் விடுமுறை அளிக்கப்படுகிறது.மேலும் கல்வி நிறுவனங்களைப் பொறுத்த வரையில் பள்ளிகள், கல்லூரிகள் ஆகியவைகளில் நடைபெறும் முக்கிய தேர்வுகளுக்கு இடையூறு ஏற்படாதவகையில் இருக்க வேண்டும் எனவும் ஆட்சியர் தெரிவித்தார்.


மக்கள் கருத்து


மக்கள் பதிவு செய்யும் கருத்துகள் தணிக்கையின்றி பிரசுரமாகும் வகையில் மென்பொருள் வடிவமைக்கப்பட்டுள்ளது. தொழில்நுட்ப குறைபாடுகள் காரணமாக கருத்துக்கள் பதிவாவதில் சிறிது காலதாமதம் ஏற்பட வாய்ப்புள்ளது. வாசகர்களின் கருத்துக்களுக்கு நிர்வாகம் பொறுப்பாக மாட்டார்கள். நாகரீகமற்ற மற்றும் பிறர் மனதை புண்படுத்தகூடிய கருத்துகளை / வார்த்தைகளைப் பயன்படுத்துவதை தவிர்க்கும்படி கேட்டுக்கொள்கிறோம்.

ஆங்கிலத்தில் தட்டச்சு செய்ய Ctrl+G -ஐ அழுத்தவும்.



மேலும் தொடரும் செய்திகள்

Sponsored Ads







Tirunelveli Business Directory