» செய்திகள் - விளையாட்டு » மாவட்ட செய்தி (திருநெல்வேலி)

காமராஜர் கல்லூரியில் கூடுதல் பாடப்பிரிவுகள் : காங்கிரஸ் கோரிக்கை

புதன் 13, ஜூன் 2018 8:49:25 PM (IST)

சுரண்டை காமராஜர் அரசு கல்லூரியில் கூடுதல் பாடப்பிரிவுகளுடன் அறிவியல் பாடப்பிரிவுகளுக்கு இரண்டாம் சுழற்சி வகுப்புகள் நடத்த நெல்லை மேற்கு மாவட்ட காங்கிரஸ் தலைவர் பழனி நாடார் மற்றும் நிர்வாகிகள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

நெல்லை மாவட்டம் சுரண்டை காமராஜர் அரசு கல்லூரி நெல்லை மேற்கு மாவட்டத்தின முக்கிய கல்லூரியாக இரு பாலரும் படிக்கும் வகையில் உள்ளது சுமார் 2300 பேர் பயிலும் இக்கல்லூரி ஏ கிரேடு அந்தஸ்தினை பெற்றுள்ளது  பிஏ, பிகாம், பிபிஏ, மற்றும் பிஎஸ்ஸி கம்ப்யூட்டர் சயின்ஸ் பாடப்பிரிவுகள் காலை மாலை என இரண்டு ஷிப்ட்களாக நடப்பதால் அதிக மாணவர்கள் பயன்பெற்று வரும் நிலையில் இளநிலை அறிவியல் பாடப்பிரிவுகளான பிஎஸ்சி பிசிக்ஸ், கெமிஸ்ட்ரி, மைக்ரோபயாலஜி போன்ற பாடப்பிரிவுகள் காலை முதல் ஷிப்ட் மட்டுமே நடைபெறுகின்றன. போதிய வகுப்பறைகள் இல்லாத காரணத்தினால் பிஎஸ்சி கணித பிரிவு முதல் ஷிப்ட் மாணவர்களுக்காக இரண்டாவது ஷிப்டில் வகுப்புகள் நடக்கின்றன  

அத்துடன் பிஏ வரலாறு பாடப்பிரிவு துவங்கப்படவில்லை. இதனால் ஓவ்வொரு வருடமும் அதிகளவு மாணவ மாணவியர் சுரண்டை கல்லூரியில் இடம் கிடைக்காமல் படிப்பை தொடரமுடியாமலும் அல்லது வெகு தொலைவில் உள்ள தனியார் கல்லூரிகளில் சேர்ந்தும் பயில்கின்றனர். இதனால் ஏழை மற்றும் நடுத்தர மாணவர்கள் மிகவும் பாதிக்கப்படும் சூழல் உள்ளது ஆகவே நெல்லை மேற்கு மாவட்ட மாணவ மாணவிகளின் நலன் கருதி சுரண்டை காமராஜர் அரசு கல்லூரியில் பிஏ வரலாறு மற்றும் பிஎஸ்ஸி கணிதம், பிஸிக்ஸ், கெமிஸ்ட்ரி, மைக்ரோபயாலஜி, ஆகிய பாடப் பிரிவுகளுக்கு மாலை இரண்டாம் ஷிப்ட் வகுப்புகள் துவக்கவும் வேண்டுமென நெல்லை மேற்கு மாவட்ட காங்கிரஸ் தலைவர் பழனி நாடார் உயர் கல்வித்துறை துறை அமைச்சர் மற்றும் அதிகாரிகளுக்கு கோரிக்கை விடுத்துள்ளார்.


மக்கள் கருத்து

மக்களில் ஒருவன்Jun 14, 2018 - 01:08:31 PM | Posted IP 117.2*****

முதலில் பேருந்து வசதி செய்து கொடுங்கள்

மக்கள் பதிவு செய்யும் கருத்துகள் தணிக்கையின்றி பிரசுரமாகும் வகையில் மென்பொருள் வடிவமைக்கப்பட்டுள்ளது. தொழில்நுட்ப குறைபாடுகள் காரணமாக கருத்துக்கள் பதிவாவதில் சிறிது காலதாமதம் ஏற்பட வாய்ப்புள்ளது. வாசகர்களின் கருத்துக்களுக்கு நிர்வாகம் பொறுப்பாக மாட்டார்கள். நாகரீகமற்ற மற்றும் பிறர் மனதை புண்படுத்தகூடிய கருத்துகளை / வார்த்தைகளைப் பயன்படுத்துவதை தவிர்க்கும்படி கேட்டுக்கொள்கிறோம்.

ஆங்கிலத்தில் தட்டச்சு செய்ய Ctrl+G -ஐ அழுத்தவும்.மேலும் தொடரும் செய்திகள்

Sponsored Ads


Tirunelveli Business Directory