» செய்திகள் - விளையாட்டு » மாவட்ட செய்தி (திருநெல்வேலி)

களக்காடு தலையணைக்கு செல்ல இன்றுமுதல் அனுமதி

வியாழன் 14, ஜூன் 2018 12:06:55 PM (IST)

வெள்ளம் தணிந்ததால் களக்காடு தலையணைக்கு செல்ல சுற்றுலா பயணிகளுக்கு விதிக்கப்பட்டிருந்த தடை விலக்கப்பட்டது.

களக்காடு புலிகள் காப்பகத்திற்குட்பட்ட மேற்கு தொடர்ச்சி மலையில் கடந்த சில நாட்களாக சாரல் மழை பெய்து வந்தது. தொடர்ந்து பெய்து வந்த சாரல் மழை வலுவடைந்ததால் அருவி மற்றும் நீரோடைகளில் கடும் வெள்ளப் பெருக்கு ஏற்பட்டது. களக்காடு தலையணையில் காட்டாற்று வெள்ளம் கரைபுரண்ட வண்ணம் இருந்தது. இதுபோல திருக்குறுங்குடி நம்பியாற்றிலும் காட்டாற்று வெள்ளம் ஓடியது. இதனால் களக்காடு புலிகள் காப்பகம் கடந்த 10-ம் தேதி மூடப்பட்டது. இதையடுத்து தலையணை மற்றும் திருக்குறுங்குடி நம்பி கோவில் நுழைவு வாயில்கள் மூடப்பட்டு, வனத்துறையினர் பாதுகாப்பு பணியில் ஈடுபடுத்தப்பட்டனர்.

இந்நிலையில் நம்பியாற்றில் வெள்ளம் தணிந்ததை அடுத்து, திருக்குறுங்குடி திருமலைநம்பி கோவிலுக்கு செல்ல பக்தர்களுக்கு நேற்று முதல் மீண்டும் அனுமதி வழங்கப்பட்டது. இதற்கிடையே தலையணையில் வெள்ளம் தணிந்ததால் இன்று காலை களக்காடு புலிகள் காப்பகம் திறக்கப்பட்டது. தலைய ணைக்கு செல்ல சுற்றுலா பயணிகளுக்கு விதிக்கப்பட்டிருந்த தடை விலக்கப்பட்டது.


மக்கள் கருத்து


மக்கள் பதிவு செய்யும் கருத்துகள் தணிக்கையின்றி பிரசுரமாகும் வகையில் மென்பொருள் வடிவமைக்கப்பட்டுள்ளது. தொழில்நுட்ப குறைபாடுகள் காரணமாக கருத்துக்கள் பதிவாவதில் சிறிது காலதாமதம் ஏற்பட வாய்ப்புள்ளது. வாசகர்களின் கருத்துக்களுக்கு நிர்வாகம் பொறுப்பாக மாட்டார்கள். நாகரீகமற்ற மற்றும் பிறர் மனதை புண்படுத்தகூடிய கருத்துகளை / வார்த்தைகளைப் பயன்படுத்துவதை தவிர்க்கும்படி கேட்டுக்கொள்கிறோம்.

ஆங்கிலத்தில் தட்டச்சு செய்ய Ctrl+G -ஐ அழுத்தவும்.மேலும் தொடரும் செய்திகள்

Sponsored AdsSterlite Industries (I) Ltd
Tirunelveli Business Directory