» செய்திகள் - விளையாட்டு » மாவட்ட செய்தி (திருநெல்வேலி)

தொடர்மழையால் வெண்ணமடை குளம் நிரம்பியது

வியாழன் 14, ஜூன் 2018 4:45:07 PM (IST)

தொடர்மழையால் வெண்ணமடை குளம் முழுவதுமாக நிரம்பியது.

கடந்த சில நாட்களுக்கு முன்பு மெயினருவி மற்றும் ஐந்தருவியில் கடும் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டதால் அந்த அருவிகளில் குளிக்க தொடர்ச்சியாக 3 நாட்கள் தடை விதிக்கப்பட்டது. பின்பு வெள்ளப்பெருக்கு குறைந்ததால் தடை நீக்கப்பட்டது.

ஐந்தருவியில் கடந்த சில நாட்களாக தண்ணீர் அதிகளவில் கொட்டி வருவதால், படகு சவாரி நடக்கும் வெண்ணமடை குளத்திற்கு தண்ணீர் வரத்தொடங்கியது. அந்த குளம் தற்போது முழுவதுமாக தண்ணீர் நிரம்பி காணப்படுகிறது. இதனால் அங்கு படகு சவாரி விரைவில் தொடங்கப்படலாம் என எதிர்பார்க்கப்படுகிறது.

படகு சவாரிக்காக பழைய படகுகள் அனைத்தும் பராமரிக்கப்பட்டு தயார் நிலையில் உள்ளன. அதே போல் புதிதாக 20 படகுகளும் வந்துள்ளன. ஐந்த ருவிக்கு வரும் சுற்றுலா பயணிகள் படகு சவாரி நடக்கும் என நினைத்து படகு குழாமுக்கு வந்து செல்கிறார்கள். ஆனால் படகு சவாரி தொடங்கப் படாததை பார்த்து ஏமாற்றத்துடன் திரும்பி செல்கிறார்கள். ஆகவே அங்கு விரைவில் படகு சவாரி தொடங்கப்பட வேண்டும் என சுற்றுலா பயணிகள் எதிர்பார்ப்பில் உள்ளனர்.


மக்கள் கருத்து


மக்கள் பதிவு செய்யும் கருத்துகள் தணிக்கையின்றி பிரசுரமாகும் வகையில் மென்பொருள் வடிவமைக்கப்பட்டுள்ளது. தொழில்நுட்ப குறைபாடுகள் காரணமாக கருத்துக்கள் பதிவாவதில் சிறிது காலதாமதம் ஏற்பட வாய்ப்புள்ளது. வாசகர்களின் கருத்துக்களுக்கு நிர்வாகம் பொறுப்பாக மாட்டார்கள். நாகரீகமற்ற மற்றும் பிறர் மனதை புண்படுத்தகூடிய கருத்துகளை / வார்த்தைகளைப் பயன்படுத்துவதை தவிர்க்கும்படி கேட்டுக்கொள்கிறோம்.

ஆங்கிலத்தில் தட்டச்சு செய்ய Ctrl+G -ஐ அழுத்தவும்.



மேலும் தொடரும் செய்திகள்

Sponsored Ads






Tirunelveli Business Directory