» செய்திகள் - விளையாட்டு » மாவட்ட செய்தி (திருநெல்வேலி)

சங்கரன்கோவிலில் இளைஞர் மீது தாக்குதல் : ஒருவருக்கு போலீஸ் வலை

வியாழன் 14, ஜூன் 2018 5:33:56 PM (IST)

திருநெல்வேலி அருகே புரோட்டா மாஸ்டர் மீது தாக்குதல் நடத்தப்பட்டது.

சங்கரன்கோவில் முனிசிபல் காலனியை சேர்ந்தவர் முத்துவீரன் (27).இவர் ஏ.கரிசல்குளத்தில் உள்ள பாட்டி மாரியம்மாள் வீட்டிலிருந்து வேலைக்கு செல்வது வழக்கமாம்.அதே பகுதியை சேர்ந்த சுந்தரய்யா (27) வெளி நாட்டிலிருந்து விடுமுறையில் ஊருக்கு வந்துள்ளார்.அப்போது பாட்டி வீட்டிற்கு நடந்து சென்ற முத்துவீரனுக்கும்,சுந்தரய்யாவிற்கும் தகராறு ஏற்பட்டுள்ளது.மேலும் முத்துவீரனை ஜாதி கூறி சுந்தரய்யா திட்டியதோடு அவரது தாக்கினாராம்.

இதில் காயமடைந்த முத்துவீரன் சங்கரன்கோவில் மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டார்.இதுகுறித்த புகாரின் பேரில் வழக்குபதிந்த சங்கரன்கோவில் போலீசார் சுந்தரய்யா மீது வழக்குபதிந்து அவரை தேடி வருகின்றனர்.


மக்கள் கருத்து


மக்கள் பதிவு செய்யும் கருத்துகள் தணிக்கையின்றி பிரசுரமாகும் வகையில் மென்பொருள் வடிவமைக்கப்பட்டுள்ளது. தொழில்நுட்ப குறைபாடுகள் காரணமாக கருத்துக்கள் பதிவாவதில் சிறிது காலதாமதம் ஏற்பட வாய்ப்புள்ளது. வாசகர்களின் கருத்துக்களுக்கு நிர்வாகம் பொறுப்பாக மாட்டார்கள். நாகரீகமற்ற மற்றும் பிறர் மனதை புண்படுத்தகூடிய கருத்துகளை / வார்த்தைகளைப் பயன்படுத்துவதை தவிர்க்கும்படி கேட்டுக்கொள்கிறோம்.

ஆங்கிலத்தில் தட்டச்சு செய்ய Ctrl+G -ஐ அழுத்தவும்.



மேலும் தொடரும் செய்திகள்

Sponsored Ads







Tirunelveli Business Directory