» செய்திகள் - விளையாட்டு » மாவட்ட செய்தி (திருநெல்வேலி)

குற்றாலஅருவி பகுதிகளில் நெல்லைஆட்சியர் ஆய்வு

வியாழன் 14, ஜூன் 2018 7:51:36 PM (IST)


திருநெல்வேலி மாவட்டம், குற்றாலம் அருவி பகுதிகளில் மாவட்ட ஆட்சியர் ஷில்பா பிரபாகர் சதீஷ் ஆய்வு செய்தார்.

ஐந்தருவி மற்றும் மெயினருவி பகுதியில் உள்ள வாகனங்கள் நிறுத்துமிடங்களில் உள்ள ஆக்கிரமிப்புகளை அகற்றிட உத்தரவிட்டார். மேலும், அப்பகுதியில் பொது இடங்களில் உள்ள மின் விளக்குகள் அனைத்தையும் முறையாக பராமரிக்க வேண்டுமென உத்தரவிட்டார்.பின்னர், மாவட்ட ஆட்சியர் செய்தியாளர்களிடம் தெரிவித்ததாவது-திருநெல்வேலி மாவட்டத்தில் தென்மேற்கு பருவமழை துவங்கியுள்ளதால் குற்றாலத்தில் உள்ள அனைத்து  அருவிகளிலும் தண்ணீர் வரத்து சீராக உள்ளது. அதிகளவிலான சுற்றுலா பயணிகள் வருகை அதிகரித்துள்ளது. அனைத்து அருவி பகுதிகளிலும் இன்று ஆய்வு மேற்கொள்ளப்பட்டுள்ளது. பழைய குற்றாலஅருவி பகுதியில் 2.5 ஏக்கர் நிலப்பரப்பளவில் வாகன நிறுத்தம் அமைக்கும் பணிகள் மேற்கொள்ளப்படவுள்ளது.

அருவி பகுதிகளுக்கு செல்லும் சாலைகளை பராமரிப்பு பணிகள் மேற் கொள்ளவும், இரவில் குளிக்கும் பொதுமக்களின் வசதிக்காக அருவி பகுதி, உடை மாற்றும் பகுதி, கழிப்பிடப் பகுதிகளில் உள்ள மின் விளக்குகளின் பழுதுகளை உடனடியாக சரிசெய்திட நடவடிக்கை எடுக்கப்படும். வாகனங்களுக்கு அரசு நிர்ணயித்துள்ள கட்டணம் மட்டுமே வசூலிக்கப்பட வேண்டும். கூடுதல் கட்டணம் வசூலித்தால் உடன் நடவடிக்கை எடுக்கப்படும். அனுமதி பெற்றுள்ள கடைகள் அனுமதிக்கப்பட்ட அளவில் மட்டுமே வைக்க வேண்டும். அனுமதியின்றி வைக்கப்பட்டுள்ள கடைகள், ஆக்கிரமிப்புகள் அகற்றிட நடவடிக்கை எடுக்கப்படும். துப்புரவு பணியாளர்கள் தேவையான அளவு நியமிக்கப்பட்டுள்ளது. உயர்நீதி மன்ற உத்தரவின்படி பிளாஸ்டிக் பைகள் பயன்படுத்தவும், எண்ணெய், ஷாம்பு, சீயக்காய் போன்ற பொருட்கள் பயன்படுத்துவது தடை செய்யப்பட்டள்ளது. பொதுமக்கள் துணி பைகள், காகித பைகளை பயன்படுத்த வேண்டும்.

கூடுதல் கட்டணம் குறித்த புகார்களுக்கு பேரூராட்சி அலுவலகத்தில் உதவி மையம் திறக்கப்பட்டுள்ளது. பொதுமக்கள் புகார் தெரிவிக்கும் வகையில் உதவி மையம் தொலைபேசி எண்.04633 283128 பொதுமக்களுக்கு தெரியும் வகையில் பேனர் வைக்கப்பட்டு உள்ளது.


மக்கள் கருத்து


மக்கள் பதிவு செய்யும் கருத்துகள் தணிக்கையின்றி பிரசுரமாகும் வகையில் மென்பொருள் வடிவமைக்கப்பட்டுள்ளது. தொழில்நுட்ப குறைபாடுகள் காரணமாக கருத்துக்கள் பதிவாவதில் சிறிது காலதாமதம் ஏற்பட வாய்ப்புள்ளது. வாசகர்களின் கருத்துக்களுக்கு நிர்வாகம் பொறுப்பாக மாட்டார்கள். நாகரீகமற்ற மற்றும் பிறர் மனதை புண்படுத்தகூடிய கருத்துகளை / வார்த்தைகளைப் பயன்படுத்துவதை தவிர்க்கும்படி கேட்டுக்கொள்கிறோம்.

ஆங்கிலத்தில் தட்டச்சு செய்ய Ctrl+G -ஐ அழுத்தவும்.மேலும் தொடரும் செய்திகள்

Sponsored Ads


Tirunelveli Business Directory