» செய்திகள் - விளையாட்டு » மாவட்ட செய்தி (திருநெல்வேலி)

வள்ளியூர் ரயில்வேகேட்டில் போக்குவரத்து பாதிப்பு : வாகனஓட்டிகள் அவதி

செவ்வாய் 19, ஜூன் 2018 11:25:25 AM (IST)


நெல்லை மாவட்டம் வள்ளியூர் ரயில்வே கேட்டில் ஒரு மணி நேரமாக போக்குவரத்து பாதிக்கப்பட்டதால் வாகனஓட்டிகள் அவதியடைந்தனர்.

நெல்லை மாவட்டம் வள்ளியூர் ரயில்வே கேட் 5மாத்திற்கு முன்பு பாலம் பணி தொடங்கியது .இந்த பாலம் தொடங்கிய நாள் முதல் இந்த வழியாக கனரக வாகனம் செல்ல ரயில்வே நிர்வாகம் தடைசெய்யப்பட்டன .ஆனால் அதையும் மீறி இரவு நேரங்களில் பகல் நேரங்களில் வாகனம் சென்று கொண்டு தான் இருந்தன. இன்று காலை ரயில்வே கேட் வழியாக பெட்ரோல் ஏற்ற வந்த லாரி அதன் வழியாக வந்தன ரயில்வே கேட்டின் இரு பக்கத்திலும் இரும்பு கம்பியால் கொண்டு தூண் அமைக்கப்பட்டு கனரக வாகனம் செல்ல முடியாத அளவு மேலே இரும்பு கம்பி அமைக்கப்பட்டு இருந்த ஆனால் அதையும் மீறி பெட்ரோல் லாரியும் பருத்தி பஞ்சு ஏற்ற வந்த லாரியும் அதன் வழியாக வந்ததால் ஒரு மணி நேரமாக போக்குவரத்து பாதிப்பு ஏற்பட்டது.

இது வழியாக தான் வள்ளியூர் திருச்செந்தூர் செல்ல வேண்டி சூழல் உள்ளது. பள்ளி மாணவர்கள் வேலைக்கு செல்வோர் ஒருமணி நேரமாக போக்குவரத்தால் பாதிக்கப்பட்டனர். சம்பவம் அறிந்து வந்த காவல்துறையினர் போக்குவரத்து இடையூராக நின்ற லாரியே அங்கு இருந்து அப்புறபடுத்தி சரி செய்து வாகனம் செல்ல நடவடிக்கை எடுத்தனர். விரைந்து பணியே முடிக்க மக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.


மக்கள் கருத்து


மக்கள் பதிவு செய்யும் கருத்துகள் தணிக்கையின்றி பிரசுரமாகும் வகையில் மென்பொருள் வடிவமைக்கப்பட்டுள்ளது. தொழில்நுட்ப குறைபாடுகள் காரணமாக கருத்துக்கள் பதிவாவதில் சிறிது காலதாமதம் ஏற்பட வாய்ப்புள்ளது. வாசகர்களின் கருத்துக்களுக்கு நிர்வாகம் பொறுப்பாக மாட்டார்கள். நாகரீகமற்ற மற்றும் பிறர் மனதை புண்படுத்தகூடிய கருத்துகளை / வார்த்தைகளைப் பயன்படுத்துவதை தவிர்க்கும்படி கேட்டுக்கொள்கிறோம்.

ஆங்கிலத்தில் தட்டச்சு செய்ய Ctrl+G -ஐ அழுத்தவும்.மேலும் தொடரும் செய்திகள்

Sponsored Ads
Sterlite Industries (I) LtdTirunelveli Business Directory