» செய்திகள் - விளையாட்டு » மாவட்ட செய்தி (திருநெல்வேலி)
குற்றாலத்தில் கார் விபத்து: மேலும் ஒரு வாலி்பர் பலி
செவ்வாய் 19, ஜூன் 2018 11:56:13 AM (IST)
குற்றாலத்தில் கார் மரத்தில் மோதிய விபத்தில் தூத்துக்குடியை சேர்ந்த மேலும் ஒரு வாலி்பர் உயிரிழந்தார்.

அன்று இரவு இவர்கள் குற்றாலம் மெயின் அருவி, ஐந்தருவி, புலி அருவி சிற்றருவி ஆகிய அருவிகளில் குளித்துவிட்டு இன்று அதிகாலை 5 மணிக்கு பழையகுற்றால அருவிக்கு சென்றுள்ளார்கள். அப்போது பழைய குற்றாலம் செல்லும் வழியில் அந்த கார் கட்டுப்பாட்டை இழந்து சாலை ஓரம் நின்ற ஒரு மரத்தில் மோதியுள்ளது. இதில் காரை ஓட்டிவந்த சக்திவேல் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார். காரின் உரிமையாளர் பிரபு அவரது மனைவி நர்மதா மற்றும் அவரது நண்பர் ஆறுமுகம் ஆகியோர் பலத்த காயம் அடைந்தனர். தகவலறிந்த குற்றாலம் காவல் நிலைய சப் இன்ஸ்பெக்டர் மாதவன் மற்றும் போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்து படுகாயம் அடைந்த 3 பேரையும் மீட்டு உடனடியாக தென்காசி அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.
பின்னர், 3பேரும் மேல்சிகிச்சைக்காக பாளை அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவ மனையில் அனுமதிக்கப்பட்டனர். இந்நிலையில், இவ்விபத்தில் காயம் அடைந்த ஆறுமுகம் சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார். இந்த விபத்தில் ஏற்கனவே பலியான சக்திவேலும் இவரும் நெருங்கிய நண்பர்களாவர். இருவரும் சேர்ந்தே பல்வேறு இடங்களுக்குச் சென்று வந்துள்ளனர். இதனால் அவர்களது உறவினர்கள் மத்தியில் பெரும் சோகத்தை ஏற்ப்படுத்தியுள்ளது. விபத்து தொடர்பாக குற்றாலம் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.
மக்கள் கருத்து
மேலும் தொடரும் செய்திகள்

குரூப் 2 தேர்வு எழுதுபவர்களுக்கான ஏற்பாடுகள் : நெல்லை ஆட்சியர் அறிவிப்பு
வெள்ளி 22, பிப்ரவரி 2019 8:06:20 PM (IST)

ஜாக்டோஜியோ பொறுப்பாளர்கள் மீதான வழக்குகள் தள்ளுபடி : கூட்டத்தில் வலியுறுத்தல்
வெள்ளி 22, பிப்ரவரி 2019 6:47:59 PM (IST)

பேருந்து நிலையம் திறக்கும் போது புதிய பேருந்துகள் இயக்கப்படுமா ? பொதுமக்கள் எதிர்பார்ப்பு
வெள்ளி 22, பிப்ரவரி 2019 6:29:10 PM (IST)

நெல்லை மாவட்டத்தில் வட்டாச்சியர்கள் இட மாற்றம் : மாவட்டஆட்சியர் உத்தரவு
வெள்ளி 22, பிப்ரவரி 2019 6:09:36 PM (IST)

பட்டாசு ஆலையில் பயங்கர வெடிவிபத்து: 5 தொழிலாளர்கள் பரிதாப பலி
வெள்ளி 22, பிப்ரவரி 2019 5:57:34 PM (IST)

24 மணி நேர அரசு மருத்துவமனை அமைக்க வேண்டும் : சுரண்டை பொதுமக்கள் எதிர்பார்ப்பு
வெள்ளி 22, பிப்ரவரி 2019 2:06:38 PM (IST)
