» செய்திகள் - விளையாட்டு » மாவட்ட செய்தி (திருநெல்வேலி)

பணம் வழங்காததால் அரசுஅலுவலகம் முற்றுகை : சுந்தரபாண்டியபுரத்தில் பரபரப்பு

செவ்வாய் 19, ஜூன் 2018 12:17:12 PM (IST)


சுந்தரபாண்டியபுரம் பேரூராட்சியில் அனைவருக்கும் வீடு வழங்கும் திட்டத்தில் பயணாளிகளுக்கு பணம் வழங்காததை கண்டித்து திடீரென பேரூராட்சி அலுவலகத்தை முற்றுகை போராட்டம் நடத்தினர்.

அனைவருக்கும் வீடு கட்டி வழங்க வேண்டுமென மத்திய அரசு அனைவருக்கும் வீடு வழங்கும் திட்டத்தில் சுந்தரபாண்டியபுரம் பேரூராட்சியில் 2016-17 ம் ஆண்டில் 66 பயனாளிகளுக்கு வீடு கட்டும் ஆணை பேரூராட்சியால் வழங்கப்பட்டது இதில் சுமார் 45 பயனாளிகள் தாங்கள் வசித்து வந்த வீட்டை இடித்து விட்டு வாடகை வீடு பிடித்து கடன் வாங்கி வீடு கட்டும் பணியை  துவக்கியுள்ளனர். இதில் பலர் ரூப் சென்ட்ரிங் அடித்தும் சிலர் முழு வேலை முடித்து குடி புகுந்தும் இது வரை முதல் கட்ட மானிய தொகை கூட இது வரை வழங்கபடவில்லை இதனால் கடந்த இரண்டு மாதத்திற்க்கு முன்பு பேரூராட்சி நிர்வாக அதிகாரியை சந்தித்து முறையிட்டும் இது வரை வழங்கப்பட வில்லை ஓரு சிலருக்கு மட்டும் மானிய தொகை வழங்கப்பட்டுள்ளது.

இதனால் வீடு கட்டும் பணியை முடிக்க முடியாமலும் வாடகை கொடுத்தும் வட்டிக்கு வாங்கி வீடு கட்டி வட்டி கொடுக்க முடியாமல் அவதிப்படுவதாகவும் உடனடியாக  மானிய தொகை முழுவதும் உடனடியாக வழங்க கோரியும் நகர காங்கிரஸ் தலைவர் வெற்றிவேல் (எ) பாலகன் தலைமையில் ஆறுமுகம், சங்கரசுப்பு, பெரிய செல்லையா, ராமலட்சுமி, அழகுராஜ், மாரியப்பன், சங்கர், கோபால், முத்துபாண்டி, மாரி, சுடலையாண்டி , முருகன் உள்ளிட்ட 20 க்கும் மேற்ப்பட்டோர் கலந்து கொண்டு பேருராட்சி அலுவலகத்தை முற்றுகையிட்டு செயல் அலுவலர் பதீருவீன் நிஷா விடம் கோரிக்கை மனு அளித்தனர்

இந் நிலையில் நடப்பு நிதியாண்டிற்க்கான வீடு கட்டும் திட்டத்தில் 97 பயணாளிகள் கண்டறியப்பட்டு அவர்களுக்கு ஆணை வழங்கப்பட வேண்டிய நிலையில் அவர்களும் வீட்டை இடித்துவிட்டு கட்ட முடியாமல் சிரமத்தில் இருந்து விட கூடாது என தயக்கம் காட்டி வருகின்றனர். இதே நிலை பல இடங்களிலும் இருப்பதாக தெரிய  வந்துள்ளது. எனவே இது குறித்து  மாவட்ட ஆட்சித் தலைவரும் சம்பந்தப்பட்ட அதிகாரிகளும் விரைந்து நடவடிக்கை எடுக்க  வேண்டுமென பெது மக்கள்  கோரிக்கை விடுத்துள்ளனர்.


மக்கள் கருத்து


மக்கள் பதிவு செய்யும் கருத்துகள் தணிக்கையின்றி பிரசுரமாகும் வகையில் மென்பொருள் வடிவமைக்கப்பட்டுள்ளது. தொழில்நுட்ப குறைபாடுகள் காரணமாக கருத்துக்கள் பதிவாவதில் சிறிது காலதாமதம் ஏற்பட வாய்ப்புள்ளது. வாசகர்களின் கருத்துக்களுக்கு நிர்வாகம் பொறுப்பாக மாட்டார்கள். நாகரீகமற்ற மற்றும் பிறர் மனதை புண்படுத்தகூடிய கருத்துகளை / வார்த்தைகளைப் பயன்படுத்துவதை தவிர்க்கும்படி கேட்டுக்கொள்கிறோம்.

ஆங்கிலத்தில் தட்டச்சு செய்ய Ctrl+G -ஐ அழுத்தவும்.மேலும் தொடரும் செய்திகள்

Sponsored Ads

Sterlite Industries (I) Ltd


Tirunelveli Business Directory