» செய்திகள் - விளையாட்டு » மாவட்ட செய்தி (திருநெல்வேலி)

காட்டுப்பன்றிகள் அட்டகாசம் சோளபயிர்கள் நாசம் : சுரண்டையில் விவசாயிகள் கவலை

புதன் 20, ஜூன் 2018 12:31:03 PM (IST)சுரண்டை அருகே உள்ள பரங்குன்றாபுரத்தில் காட்டு பன்றிகள் அட்ட காசத்தால் சோளக்கதிர்கள் நாசமடைந்துள்ளதால் விவசாயிகள் கவலை அடைந்துள்ளனர்.

திருநெல்வேலி மாவட்டம் சுரண்டை அருகே உள்ள பரங்குன்றாபுரத்திற்கு தெற்கு பகுதியில் அதிசயபுரம் பறம்பு உள்ளது .இந்த பரம்பில் பன்றிகள் மற்றும் மர நாய்கள் உள்ளது .இரவு நேரத்தில் இப்பகுதியில் 50 ஏக்கரில் பயிரிட்டுள்ள சோள பயிருக்குள் சுமார் 15க்கும் மேற்ப்பட்ட காட்டு பன்றிகள் தோட்டத்துக்குள் புகுந்து சோள நாத்து ,மற்றும் பருத்திகளை நாசம் செய்கிறது .விவசாயிகள் லைட் மற்றும் சீரியல் பல்புகள் கட்டி விடிய விடிய எரிய விட்டாலும் நாய்களை வளர்த்து பாது காத்தாலும் தோட்டத்தை சுற்றி சிறு வேலியமைத்தாலும் துணிகளால் பொம்மைகள் செய்து வைத்தாலும் விடிய விடிய காவல் காத்தாலும் பன்றிகள் தோட்டத்துக்குள் புகுந்து சோள நாத்தை நாசம் செய்து விடுகிறது .பன்றிகள் நாசம் செய்த சோள நாத்தை மாடுகள் தின்பதில்லை . இதனால் விவசாயிக்கு அதிக மனஉளைச்சலும் நஷ்டமும் ஏற்படுகிறது.
 
இது குறித்து விவசாயி அதிமுக விவசாய அணி மாவட்ட துணைச் செயலாளர் வைத்தியலிங்கம் கூறியதாவது விவசாயத்தில் நஷ்டம் ஏற்ப்பட்ட நிலையிலும் நிலம் தரிசாகிவிடகூடாது என சோளம் விதைத்தோம் தற்போது பொதி பருவம் வந்துள்ள நிலையில் கூட்டமாக வரும் பன்றிகள் சோள நாத்தினை அழித்து நாசம் செய்து தொல்லை கொடுக்கிறது. இதனால் பெரும் நஷ்டம் ஏற்படுகிறது. பருத்தியை மர நாய் சேதப்படுத்துகின்றன வன துறையினர் விவசாய நிலத்தை சுற்றி கம்பி வேலிபோட சொல்கிறார்கள். அது சாத்தியம் இல்லாதது .ஒவ்வொரு வயலுக்கும் தனித்தனியாக கம்பிவேலி போட்டால் செலவும் அதிகம் .

சாதாரண கம்பி வேலி போடுவதால் எந்த பிரயோசனமும் இல்லை .அரசு சிறிய பரம்பை சுற்றி கம்பி வேலிபோட்டு விட்டால் செலவும்குறைவு. நூற்றுக்கணக்கான விவசாய நிலம் பாதுகாக்கப்படும் .கிணற்றில் அதிக அளவு தண்ணீர் இருப்பதால் மீண்டும் நாங்கள் நெல் பயிர் செய்வோம் அரசு அதற்கான முயற்சியை செய்ய வேண்டும் . விலங்குகள் மீது காட்டும் அக்கறையை உணவு உற்பத்தி செய்ய ஆசைப்படும் விவசாயி மீதும் அரசு காட்டவேண்டும் சேதமடைந்த பயிர்களுக்கு நஷட ஈடு வழங்க வேண்டு மென கோரிக்கை வைத்தார். 


மக்கள் கருத்து


மக்கள் பதிவு செய்யும் கருத்துகள் தணிக்கையின்றி பிரசுரமாகும் வகையில் மென்பொருள் வடிவமைக்கப்பட்டுள்ளது. தொழில்நுட்ப குறைபாடுகள் காரணமாக கருத்துக்கள் பதிவாவதில் சிறிது காலதாமதம் ஏற்பட வாய்ப்புள்ளது. வாசகர்களின் கருத்துக்களுக்கு நிர்வாகம் பொறுப்பாக மாட்டார்கள். நாகரீகமற்ற மற்றும் பிறர் மனதை புண்படுத்தகூடிய கருத்துகளை / வார்த்தைகளைப் பயன்படுத்துவதை தவிர்க்கும்படி கேட்டுக்கொள்கிறோம்.

ஆங்கிலத்தில் தட்டச்சு செய்ய Ctrl+G -ஐ அழுத்தவும்.மேலும் தொடரும் செய்திகள்

Sponsored Ads
Sterlite Industries (I) LtdTirunelveli Business Directory