» செய்திகள் - விளையாட்டு » மாவட்ட செய்தி (திருநெல்வேலி)

சுத்தமல்லியில் காவலர் குடியிருப்புகள் திறப்பு

புதன் 20, ஜூன் 2018 2:31:56 PM (IST)

திருநெல்வேலி மாவட்டம், சுத்தமல்லியில் ரூ.9.05 கோடி மதிப்பீட்டில் கட்டப்பட்ட 73 காவலர் குடியிருப்புகளை தமிழ்நாடு முதல்வர் காணொலிக்காட்சி மூலம் திறந்து வைத்தார்.

திருநெல்வேலி மாவட்ட காவல் கண்காணிப்பாளர் அலுவலக கூட்ட அரங்கில் தமிழ்நாடு காவலர் வீட்டுவசதி கழகத்தின் மூலம் சுத்தமல்லியில் ரூ.9.05 கோடி மதிப்பீட்டில் புதிதாக கட்டப்பட்டுள்ள 73 காவலர் குடியிருப்புகளை தமிழ்நாடு முதலமைச்சர்  தலைமைச் செயலத்திலிருந்து திறந்து வைத்த மைக்கான நேரலை நிகழ்ச்சி இன்று (20.06.2018) நடைபெற்றது. இந்நிகழ்ச்சியில், மாவட்ட ஆட்சியர் ஷில்பா பிரபாகர் சதீஷ், மாவட்ட காவல் கண்காணிப்பாளர் அருண்சக்திகுமார், மற்றும் சுத்தமல்லி காவல் நிலைய பெண் காவலர் ஆகியோர் நன்றி தெரிவித்தனர்.

சேரன்மகாதேவி வட்டம், சுத்தமல்லியில் தமிழ்நாடு காவலர் வீட்டுவசதி கழகத்தின் மூலம் 2 ஆய்வாளர்கள், 5 சார்பு ஆய்வாளர்கள், 66 காவலர்கள்  என மொத்தம் 73 காவலர் குடியிருப்புகள் ரூ.9 கோடியே 5 இலட்சம் மதிப்பில் கட்டப்பட்டுள்ள குடியிருப்புகள் மொத்தம்  48,388 சதுர அடி பரப்பளவில் கட்டப்பட்டுள்ளது. ஆய்வாளர் குடியிருப்பு 829 சதுரஅடி பரப்பளவிலும், சார்பு ஆய்வாளர் குடியிருப்பு 725 சதுரஅடி பரப்பளவிலும், காவலர் குடியிருப்பு 650 சதுரஅடி பரப்பளவிலும் கட்டப்பட்டுள்ளது. இந்த புதிய காவலர் குடியிருப்பு கட்டடத்தினை தமிழ்நாடு முதலமைச்சர் திறந்து வைத்தார்.

இந்த நிகழ்ச்சியில் நாடாளுமன்ற உறுப்பினர்கள் பிரபாகரன், விஜிலா சத்தியானந்த், வசந்தி முருகேசன், முத்துக்கருப்பன், சேரன்மகாதேவி கூடுதல் காவல் கண்காணிப்பாளர் ஆஷிஷ் ராவத்,தமிழ்நாடு காவலர் வீட்டுவசதி கழக செயற்பொறியாளர் ரவிசந்தர், உதவி செயற்பொறியாளர்கள் ஜெய்சங்கர், குமரேசன், உதவி பொறியாளர் ஆறுமுகம், முக்கிய பிரமுகர்கள் நடராஜன், சேர்மபாண்டி, வழக்கறிஞர் ராஜன், கபிரியல்ராஜன், மதியழகன், ஜெயராம் மற்றும் அலுவலர்கள், முக்கிய பிரமுர்கள், காவல் துறை அலுவலர்கள் கலந்து கொண்டனர்.


மக்கள் கருத்து


மக்கள் பதிவு செய்யும் கருத்துகள் தணிக்கையின்றி பிரசுரமாகும் வகையில் மென்பொருள் வடிவமைக்கப்பட்டுள்ளது. தொழில்நுட்ப குறைபாடுகள் காரணமாக கருத்துக்கள் பதிவாவதில் சிறிது காலதாமதம் ஏற்பட வாய்ப்புள்ளது. வாசகர்களின் கருத்துக்களுக்கு நிர்வாகம் பொறுப்பாக மாட்டார்கள். நாகரீகமற்ற மற்றும் பிறர் மனதை புண்படுத்தகூடிய கருத்துகளை / வார்த்தைகளைப் பயன்படுத்துவதை தவிர்க்கும்படி கேட்டுக்கொள்கிறோம்.

ஆங்கிலத்தில் தட்டச்சு செய்ய Ctrl+G -ஐ அழுத்தவும்.மேலும் தொடரும் செய்திகள்

Sponsored Ads


Sterlite Industries (I) Ltd

Tirunelveli Business Directory