» செய்திகள் - விளையாட்டு » மாவட்ட செய்தி (திருநெல்வேலி)

நெல்லை அணைகளின் நீர்மட்டம் தாெடர்ந்து உயர்வு

புதன் 20, ஜூன் 2018 6:09:16 PM (IST)

தென்மேற்கு பருவ மழை தீவிரமடைந்த நிலையில் நெல்லை மாவட்ட மேற்குதொடர்ச்சி மலைப்பகுதிகளில் பெய்து வரும் மழையால் அணைகளின் தொடர்ந்து நீர்மட்டம் அதிகரித்து வருகிறது.

தென்மேற்கு பருவ மழை தீவிரம் அடைந்ததை தொடர்ந்து நெல்லை மாவட்ட மேற்குதொடர்ச்சி மலைப்பகுதிகளில் கடந்த சில நாட்களாக மழை பெய்து வருகிறது. இதனால் அணைகளுக்கு நீர்வரத்து அதிகரித்து உள்ளது. ஏற்கனவே பெய்த மழையினால் கருப்பாநதி, குண்டாறு, கொடுமுடியாறு ஆகிய 3 அணைகள் நிரம்பியுள்ளன.மற்ற அணைகளுக்கு தொடர்ந்து நீர்வரத்து இருப்பதால் வேகமாக நிரம்பி வருகின்றன. பிரதான பாசன அணையான பாபநாசம் அணை நீர்மட்டம் நேற்று 80.35 அடியாக இருந்தது. இன்று இந்த அணை நீர்மட்டம் மேலும் 2 அடி உயர்ந்து 82.20 அடியாக அதிகரித்துள்ளது.

இன்று காலைவரை அணைப்பகுதியில் அதிகபட்சமாக குண்டாறு அணைப்பகுதியில் 33 மில்லிமீட்டர் மழை பெய்தது. அடவிநயினார் அணையில் 18 மில்லிமீட்டர் மழையும், பாபநாசத்தில் 6 மில்லி மீட்டர் மழையும், கடனா அணையில் 2 மில்லிமீட்டர் மழையும், சேர்வலாறில் ஒரு மில்லி மீட்டர் மழையும் பதிவாகி உள்ளது.


மக்கள் கருத்து


மக்கள் பதிவு செய்யும் கருத்துகள் தணிக்கையின்றி பிரசுரமாகும் வகையில் மென்பொருள் வடிவமைக்கப்பட்டுள்ளது. தொழில்நுட்ப குறைபாடுகள் காரணமாக கருத்துக்கள் பதிவாவதில் சிறிது காலதாமதம் ஏற்பட வாய்ப்புள்ளது. வாசகர்களின் கருத்துக்களுக்கு நிர்வாகம் பொறுப்பாக மாட்டார்கள். நாகரீகமற்ற மற்றும் பிறர் மனதை புண்படுத்தகூடிய கருத்துகளை / வார்த்தைகளைப் பயன்படுத்துவதை தவிர்க்கும்படி கேட்டுக்கொள்கிறோம்.

ஆங்கிலத்தில் தட்டச்சு செய்ய Ctrl+G -ஐ அழுத்தவும்.



மேலும் தொடரும் செய்திகள்

Sponsored Ads




Sterlite Industries (I) Ltd



Tirunelveli Business Directory