» செய்திகள் - விளையாட்டு » மாவட்ட செய்தி (திருநெல்வேலி)

நடிகர் விஜய் பிறந்த தினம் ரசிகர்கள் கொண்டாட்டம்

வெள்ளி 22, ஜூன் 2018 6:39:11 PM (IST)

நடிகர் விஜயின் 44ஆவது பிறந்த தினத்தை முன்னிட்டு அவரது ரசிகர்கள் கேக் வெட்டியும் நலத்திட்ட உதவிகள் வழங்கியும் கொண்டாடினர்.

நெல்லை டவுன் மந்திரமூர்த்தி பள்ளியில் நடைபெற்ற விழாவில் பேட்டை இளைஞரணி டாக்டர் விஜய் மக்கள் இயக்கம் இளைஞரணி தலைவர் அய்யப்பன் தலைமை தாங்கினார் ,செயலாளர் அந்தோணி முன்னிலை வகித்தார் , மாவட்ட இளைஞரணி தலைவர் ராஜகோபால் சிறப்பு விருந்தினராக கலந்து கொண்டு மாணவ,மாணவிகளுக்கு புத்தகங்கள்,பேக்,தண்ணீர் பாட்டில்கள் போன்றவற்றை வழங்கினர் அதோடு இலவச கண் மருத்துவ முகாமும் நடைபெற்றது.

இந்த நிகழ்ச்சியில் மன்ற பொருளாளர் முத்துவேல் மற்றும் நிர்வாகிகள் மாரியப்பன்,கார்த்திக்,ஐயப்பன்,சங்கர்,மணி உட்பட ஏராளமானோர் கலந்து கொண்டனர் . இதே போல் நெல்லை சந்திப்பு ஷிஃபா மருத்துவமனையில் விஜய் மக்கள் இயக்கம் சார்பில் ரத்ததானம் முகாம் நடைபெற்றது இதில் ஏராளமான விஜய் ரசிகர்கள் கலந்து கொண்டு ரத்தம் வழங்கினர் .ஏற்பாடுகளை மாநகர் தலைவர் அசோக்விஜய், செயலாளர் அழகு முருகன், துணை தலைவர் ஆறுமுகம்,பொருளாளர் ரகுமத் ஆகியோர் செய்திருந்தனர்.


மக்கள் கருத்து


மக்கள் பதிவு செய்யும் கருத்துகள் தணிக்கையின்றி பிரசுரமாகும் வகையில் மென்பொருள் வடிவமைக்கப்பட்டுள்ளது. தொழில்நுட்ப குறைபாடுகள் காரணமாக கருத்துக்கள் பதிவாவதில் சிறிது காலதாமதம் ஏற்பட வாய்ப்புள்ளது. வாசகர்களின் கருத்துக்களுக்கு நிர்வாகம் பொறுப்பாக மாட்டார்கள். நாகரீகமற்ற மற்றும் பிறர் மனதை புண்படுத்தகூடிய கருத்துகளை / வார்த்தைகளைப் பயன்படுத்துவதை தவிர்க்கும்படி கேட்டுக்கொள்கிறோம்.

ஆங்கிலத்தில் தட்டச்சு செய்ய Ctrl+G -ஐ அழுத்தவும்.



மேலும் தொடரும் செய்திகள்

Sponsored Ads







Tirunelveli Business Directory