» செய்திகள் - விளையாட்டு » மாவட்ட செய்தி (திருநெல்வேலி)

பெண் மீது தாக்குதல் நடத்திய தொழிலாளி கைது

வெள்ளி 22, ஜூன் 2018 7:17:14 PM (IST)

சங்கரன்கோவில் அருகே நிலத் தகராறில் பெண்ணை தாக்கிய தொழிலாளி கைது செய்யப்பட்டார்.

நெல்லை மாவட்டம் சங்கரன்கோவில் அருகே உள்ள ஆனையூர் காலனி தெருவை சேர்ந்தவர் சுப்பையா. இவரது மனைவி சின்னத்தாய் (65). இவர்களுக்கு சொந்தமான இடம் ஊருக்கு வெளியே உள்ளது. அந்த இடத்தை அதே ஊரை சேர்ந்த செல்லத்துரை (46) என்பவர் விலைக்கு கேட்டாராம். அதற்கு சின்னத்தாய் சம்மதம் தெரிவித்துள்ளார். அதற்கு பின்னர் அந்த இடத்தில் செல்லத்துரை ஆடு வளர்த்து வந்துள்ளார். ஆனால் இடத்தை கிரையம் முடிக்கவும் இல்லையாம், பணத்தையும் கொடுக்கவில்லை என கூறப்படுகிறது. இது பற்றி பல முறை சின்னத்தாய் செல்லத்துரையிடம் கேட்டு வந்துள்ளார். இந்நிலையில் இடம் சம்பந்தமாக பிரச்சனை 6 மாத காலத்தை கடந்து விட்டது. சம்பவத்தன்று அங்கு சென்ற சின்னத்தாய் தனது இடத்தை விட்டு காலி செய்யுமாறு செல்லத்துரையிடம் கூறியுள்ளார். 

இதனால் ஆத்திரமடைந்த செல்லத்துரை அருகில் கிடந்த கம்பியை எடுத்து சின்னத்தாயை பலமாக தாக்கியுள்ளார்.இதில் காயமடைந்த சின்னத்தாய் சங்கரன் கோவில் அரசு மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனும திக்கப்பட்டார். இது தொடர்பாக சின்னத்தாய் கொடுத்த புகாரின் பேரில் சங்கரன்கோவில் டவுண் போலீஸ் வழக்குபதிந்து செல்லத்துரையை கைது செய்தனர்.


மக்கள் கருத்து


மக்கள் பதிவு செய்யும் கருத்துகள் தணிக்கையின்றி பிரசுரமாகும் வகையில் மென்பொருள் வடிவமைக்கப்பட்டுள்ளது. தொழில்நுட்ப குறைபாடுகள் காரணமாக கருத்துக்கள் பதிவாவதில் சிறிது காலதாமதம் ஏற்பட வாய்ப்புள்ளது. வாசகர்களின் கருத்துக்களுக்கு நிர்வாகம் பொறுப்பாக மாட்டார்கள். நாகரீகமற்ற மற்றும் பிறர் மனதை புண்படுத்தகூடிய கருத்துகளை / வார்த்தைகளைப் பயன்படுத்துவதை தவிர்க்கும்படி கேட்டுக்கொள்கிறோம்.

ஆங்கிலத்தில் தட்டச்சு செய்ய Ctrl+G -ஐ அழுத்தவும்.மேலும் தொடரும் செய்திகள்

Sponsored AdsSterlite Industries (I) Ltd
Tirunelveli Business Directory