» செய்திகள் - விளையாட்டு » மாவட்ட செய்தி (திருநெல்வேலி)

தூத்துக்குடியில் ரூ.175 லட்சத்தில் எல்இடி விளக்குகள்: ஸ்மார்ட் சிட்டி நிர்வாகக் குழு ஒப்புதல்

செவ்வாய் 10, ஜூலை 2018 5:13:36 PM (IST)

தூத்துக்குடி சாலைகளில் ரூ. 175 லட்சம் மதிப்பீட்டில் எல்.இ.டி. லைட்டுகள் புதிதாக அமைப்பதற்கு ஸ்மார்ட் சிட்டி நிர்வாகக் குழு ஒப்புதல் அளித்துள்ளது.  

இது தொடர்பாக மாநகராட்சி ஆணையர் ஆல்பி ஜான் வர்க்கீஸ் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பு: தூத்துக்குடி  மாநகராட்சியானது, மத்திய அரசால் "ஸ்மார்ட் சிட்டி” என அறிவிக்கப்பட்டுள்ள நிலையில், மாநகரின் அடிப்படை கட்டமைப்பு வசதிகளுக்காக பல்வேறு பணிகள் மேற்கொள்ளப்பட்டு வருகிறது.  

இதன் தொடர்ச்சியாக மின் ஆற்றல் சிக்கன நடவடிக்கையாக மாநகரின் எல்கையான எட்டையபுரம் சாலை முதல் புதிய பேருந்து நிலையம் வரை மற்றும் மாநகரின் மையப் பகுதியான பாளையங்கோட்டை ரோடு வி.வி.டி. சிக்னல் முதல் 3வது மைல் பாலம் விரையிலான பகுதிகளில் ஸ்மார்ட் சிட்டி திட்டத்தின் கீழ் ரூ. 175.00 இலட்சம் மதிப்பீட்டில் எல்.இ.டி. லைட்டுகள் புதிதாக அமைப்பதற்கு ஸ்மார்ட் சிட்டி நிர்வாகக் குழு ஒப்புதல் அளித்துள்ளது. 

எனவே மேற்படி பணிகள் விரைவில் துவங்கப்பட்டு மாநகரின் பிரதான பகுதிகள் ஒளிரும் வகையில் பொதுமக்கள் பயன்பாட்டிற்கு கொண்டுவரப்படுமென மாநகராட்சி      ஆணையர் (ம) தனி அலுவலர்  டாக்டர்.  ஆல்பி ஜான் வர்க்கீஸ் தெரிவித்தார். 


மக்கள் கருத்து

வட்சலாபூஷண்Jul 20, 2018 - 11:07:05 AM | Posted IP 162.1*****

தூத்துக்குடி ஊற எஸ்ட்டெண்ட் பண்ணுங்க சார், இரண்டு தருக்குலையே எல்லாத்திலும் முடிக்காதீங்க sir

ஏ ராஜாJul 16, 2018 - 01:21:14 PM | Posted IP 162.1*****

பாதாள சக்கடடைதிட்டம் என்னாச்சு தெருக்கள் தோறும் மனித கழிவுகள் அசுத்தமாக உள்ளடது

சந்திரன்Jul 11, 2018 - 03:24:34 PM | Posted IP 162.1*****

கூட்டாம்புளி வசந்தம் நகர் தெரு விளக்கு இல்லாமல் தவிக்கும் மக்களுக்கு எல்.இ.டி. லைட்டுகள் அம்மைத்து தரும் மாறு அன்புடன் கேட்கிறோம் .

மக்கள் பதிவு செய்யும் கருத்துகள் தணிக்கையின்றி பிரசுரமாகும் வகையில் மென்பொருள் வடிவமைக்கப்பட்டுள்ளது. தொழில்நுட்ப குறைபாடுகள் காரணமாக கருத்துக்கள் பதிவாவதில் சிறிது காலதாமதம் ஏற்பட வாய்ப்புள்ளது. வாசகர்களின் கருத்துக்களுக்கு நிர்வாகம் பொறுப்பாக மாட்டார்கள். நாகரீகமற்ற மற்றும் பிறர் மனதை புண்படுத்தகூடிய கருத்துகளை / வார்த்தைகளைப் பயன்படுத்துவதை தவிர்க்கும்படி கேட்டுக்கொள்கிறோம்.

ஆங்கிலத்தில் தட்டச்சு செய்ய Ctrl+G -ஐ அழுத்தவும்.



மேலும் தொடரும் செய்திகள்

Sponsored Ads

Sterlite Industries (I) Ltd






Tirunelveli Business Directory