» செய்திகள் - விளையாட்டு » மாவட்ட செய்தி (திருநெல்வேலி)

கொசுத்தொல்லையால் சிறையில் துாங்க முடியவில்லை : நீதிமன்றத்தில் முகிலன் புகார்

செவ்வாய் 10, ஜூலை 2018 8:20:13 PM (IST)

மதுரை சிறையில் கொசுத்தொல்லையால் துாங்கஇயலவில்லை என வள்ளியூர் நீதிமன்றத்தில் முகிலன் புகார் அளித்துார்.

கூடன்குளம் அணுஉலை எதிர்ப்பு குழுவை சேர்ந்த முகிலன் போலீசாரால் கைது செய்யப்பட்டு நீதிமன்ற உத்தரவுப்படி சிறையிலடைக்கப்பட்டார்.இந்நிலையில் வள்ளியூர் நீதிமன்ற நீதிபதியிடம் அணு உலை எதிர்ப்பாளர் முகிலன் புகார் அளித்தார்.

இதில் மதுரை சிறையில் கொசுத் தொல்லையால் தன்னால் தூங்க முடியவில்லை எனவே தனக்கு உரிய சிகிச்சை அளித்து வேறு சிறைக்கு மாற்ற வேண்டுமென முகிலன் மனு அளித்தார்  .  இதையடுத்து முகிலனுக்கு அரசு மருத்துவமனையில் சிகிச்சை அளிக்கவும், சுகாதாரமான சிறைக்கு மாற்றவும் வள்ளியூர் நீதிமன்ற நீதிபதி உத்தரவிட்டுள்ளார்.


மக்கள் கருத்து


மக்கள் பதிவு செய்யும் கருத்துகள் தணிக்கையின்றி பிரசுரமாகும் வகையில் மென்பொருள் வடிவமைக்கப்பட்டுள்ளது. தொழில்நுட்ப குறைபாடுகள் காரணமாக கருத்துக்கள் பதிவாவதில் சிறிது காலதாமதம் ஏற்பட வாய்ப்புள்ளது. வாசகர்களின் கருத்துக்களுக்கு நிர்வாகம் பொறுப்பாக மாட்டார்கள். நாகரீகமற்ற மற்றும் பிறர் மனதை புண்படுத்தகூடிய கருத்துகளை / வார்த்தைகளைப் பயன்படுத்துவதை தவிர்க்கும்படி கேட்டுக்கொள்கிறோம்.

ஆங்கிலத்தில் தட்டச்சு செய்ய Ctrl+G -ஐ அழுத்தவும்.மேலும் தொடரும் செய்திகள்

Sponsored Ads
Sterlite Industries (I) LtdTirunelveli Business Directory