» செய்திகள் - விளையாட்டு » மாவட்ட செய்தி (திருநெல்வேலி)

குற்றாலம் மெயினருவில் குளிக்க அனுமதி: சுற்றுலாப் பயணிகள் உற்சாகம்

செவ்வாய் 10, ஜூலை 2018 8:44:21 PM (IST)

குற்றால அருவியில் குளிக்க இன்று அனுமதி வழங்கப்பட்டதை அடுத்து சுற்றுலாப்பயணிகள் உற்சாகமாக குளித்து மகிழ்ந்தனா்.

கடந்த இருதினங்களாக குற்றாலம் பகுதியில் பெய்த தொடா் சாரல்மழையின் காரணமாக குற்றாலம் பேரருவி, ஐந்தருவி, பழைய குற்றாலம் உள்ளிட்ட அருவிகளிலும் தண்ணீா் கொட்டுகிறது.திங்கள்கிழமை மாலை பெய்த தொடா் மழையின் காரணமாக பேரருவியில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டது. இதனை யடுத்து சுற்றுலாப் பயணிகள் அருவியில் குளிக்க போலீஸாா் தடைவிதித்தனா்.

செவ்வாய்க்கிழமை காலை வெள்ளத்தின் சீற்றம் தணிந்ததையடுத்து சுற்றுலா ப்பயணிகள் குளிக்க அனுமதிக்கப்பட்டனா். காலைமுதல் அவ்வப்போது மிதமான சாரல் மழையும், லேசான வெயிலும், நாள் முழுவதும் குளிா்ந்த காற்றும் வீசியது. இதனால் சுற்றுலாப் பயணிகளின் வருகை அதிகளவில் இருந்தது.


மக்கள் கருத்து


மக்கள் பதிவு செய்யும் கருத்துகள் தணிக்கையின்றி பிரசுரமாகும் வகையில் மென்பொருள் வடிவமைக்கப்பட்டுள்ளது. தொழில்நுட்ப குறைபாடுகள் காரணமாக கருத்துக்கள் பதிவாவதில் சிறிது காலதாமதம் ஏற்பட வாய்ப்புள்ளது. வாசகர்களின் கருத்துக்களுக்கு நிர்வாகம் பொறுப்பாக மாட்டார்கள். நாகரீகமற்ற மற்றும் பிறர் மனதை புண்படுத்தகூடிய கருத்துகளை / வார்த்தைகளைப் பயன்படுத்துவதை தவிர்க்கும்படி கேட்டுக்கொள்கிறோம்.

ஆங்கிலத்தில் தட்டச்சு செய்ய Ctrl+G -ஐ அழுத்தவும்.



மேலும் தொடரும் செய்திகள்

Sponsored Ads



Sterlite Industries (I) Ltd




Tirunelveli Business Directory