» செய்திகள் - விளையாட்டு » மாவட்ட செய்தி (திருநெல்வேலி)

அரசு பஸ்கள் மீது கல்வீச்சு - டிரைவர்கள் இருவர் காயம் : செய்துங்கநல்லூர் அருகே பரபரப்பு!!ய்

புதன் 11, ஜூலை 2018 12:34:05 PM (IST)

செய்துங்கநல்லூர் அருகே அடுத்தடுத்து 2 அரசு பஸ்கள் மீது கல்வீச்சு தாக்குதல் நடத்தப்பட்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

திருநெல்வேலியில் இருந்து திருச்செந்தூருக்கு நேற்றிரவு 10 மணிக்கு புறப்பட்ட அரசு பேருந்தை,  மேலஇலந்தைகுளம் கிராமத்தைச் சேர்ந்த சகாய மணி (48) ஓட்டி வந்தார். இதில் 27 பயணிகள் இருந்தனர். இந்த பேருந்து செய்துங்கநல்லூர், மேல தூதுக்குழி கிராமம் அருகே வந்தபோது பைக்கில் வந்த மர்ம நபர்கள் இருவர் பஸ்மீது சராமாரியாக கல்வீசி தாக்குதல் நடத்தினர். இதில் டிரைவர் சகாய மணிக்கு நெஞ்சில் காயம் ஏற்ப்பட்டது. 

இதுபோல், நேற்றிரவு 9 மணியளவில் உடன்குடியில் இருந்து திருநெல்வேலி நோக்கி புறப்பட்ட அரசு பஸ், 10.20 மணியளவில் கருங்குளம் பெட்ரோல் பல்க் அருகே வந்தபோது, எதிரே பைக்கில் வந்த 2 மர்ம நபர்கள் பஸ்மீது கல்வீச்சு தாக்குதல் நடத்தினர். இதில், பஸ் கண்ணாடி உடைந்து, புதுக்குளம் கிராமத்தைச் சேர்ந்த டிரைவர் சின்னதுரைக்கு (35) காயம் ஏற்ப்பட்டது. இந்த இரு சம்பவங்களும் அடுத்தடுத்து சில நிமிட இடைவெளியில் நிகழ்ந்துள்ளது. காயம் அடைந்த டிரைவர்கள் இருவரும் திருநெல்வேலி அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர். 

இதுகுறித்து செய்துங்கநல்லூர் போலீசார் வழக்குப் பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். பாளையங்கோட்டையில் சில தினங்களுக்கு முன்னர் தமிழக மக்கள் முன்னேற்ற கழக தலைவர் ஜான்பாண்டியனின் வீடு மீது பெட்ரோல் குண்டு வீசப்பட்டதற்கு எதிர்ப்பு தெரிவித்து நெல்லையில் பல பேருந்துகள் மீது கல்வீசி தாக்குதல் நடத்தப்பட்டது. இந்நிலையில், இந்த சம்பவத்தின் எதிரொலியாக தூத்துக்குடி மாவட்டத்தில் இந்த சம்பவம் நிகழ்ந்திருக்கலாம் என்ற கோணத்தில் போலீசார் விசாரணை மேற்க்கொண்டு வருகின்றனர். 


மக்கள் கருத்து


மக்கள் பதிவு செய்யும் கருத்துகள் தணிக்கையின்றி பிரசுரமாகும் வகையில் மென்பொருள் வடிவமைக்கப்பட்டுள்ளது. தொழில்நுட்ப குறைபாடுகள் காரணமாக கருத்துக்கள் பதிவாவதில் சிறிது காலதாமதம் ஏற்பட வாய்ப்புள்ளது. வாசகர்களின் கருத்துக்களுக்கு நிர்வாகம் பொறுப்பாக மாட்டார்கள். நாகரீகமற்ற மற்றும் பிறர் மனதை புண்படுத்தகூடிய கருத்துகளை / வார்த்தைகளைப் பயன்படுத்துவதை தவிர்க்கும்படி கேட்டுக்கொள்கிறோம்.

ஆங்கிலத்தில் தட்டச்சு செய்ய Ctrl+G -ஐ அழுத்தவும்.மேலும் தொடரும் செய்திகள்

Sponsored Ads

Sterlite Industries (I) Ltd


Tirunelveli Business Directory