» செய்திகள் - விளையாட்டு » மாவட்ட செய்தி (திருநெல்வேலி)

நாங்குநேரி காெலை, நீதிமன்றத்தில் ஒருவர் சரண் : பாளை.,சிறையில் அடைக்க நீதிபதி உத்தரவு

புதன் 11, ஜூலை 2018 5:51:45 PM (IST)

நாங்குநேரியில் மணல் அள்ளுவதில் ஏற்பட்ட தகராறில் சுப்பையா என்பவரை வெட்டி கொலை செய்த ஆறுமுகம் ஸ்ரீவைகுண்டம் நீதிமன்றத்தில் சரண்அடைந்தார்.

நெல்லை மாவட்டம் நாங்குநேரியை அடுத்துள்ள மஞ்சங்குளத்தை சேர்ந்த சுந்தரபாண்டி என்பவரது மகன் சுப்பையா (23). இவரது உறவினர் சுடலைக்கண்ணு (35). இருவரும் ஆற்றில் மணல் அள்ளி விற்பனை செய்யும் தொழிலில் ஈடுபட்டு வந்துள்ளனர்.இந்நிலையில்  மணல் அள்ளுவது தொடர்பாக இருவருக்கும்  போட்டி வர சுடலைக் கண்ணுவின் ஆதரவாளர் வீட்டை சூறையாடிய வழக்கில் சுப்பையா கைது செய்யப்பட்டு  சமீபத்தில்  ஜாமீனில் வெளியே வந்தார்.

இந்நிலையில் கடந்த சில நாட்களுக்கு முன் மணல் கடத்தல் வழக்கில் சுடலைக் கண்ணுவின் தம்பி ஆறுமுகம் (32)  கைது செய்யப்பட்டு  டிராக்டரும் பறிமுதல் செய்யப்பட்டது. இதற்கு சுப்பையா தான் காரணம் என சுடலைக்கண்ணு கருதியுள்ளார்.இதனிடையே சுப்பையா அரிவாளுடன் சுடலைக் கண்ணுவின் வீட்டிற்கு சென்று தகராறு செய்தாராம் இது பற்றி சுடலைக்கண்ணு நாங்குநேரி போலீசில் புகார் செய்ய சுப்பையா,  ஊருக்கு அருகே உள்ள வாழைத்தோட்டத்திற்கு சென்று பதுங்கினாராம் அதையறிந்த சுடலைக்கண்ணு சம்பவத்தன்று அதிகாலை தனது தம்பி ஆறுமுகத்துடன் தோட்டத்திற்கு செல்ல அரிவாளுடன் இருவர் வருவதை பார்த்த சுப்பையா அங்கிருந்து ஓட்டம் பிடிக்க இருவரும் சுப்பையாவை ஓட ஓட விரட்டி அரிவாளால் சரமாரியாக வெட்டினர்.
 
சுப்பையா சம்பவ இடத்திலேயே பலியானார். சுப்பையா கொலை செய்யப்பட்டு கிடப்பதை அவ்வழியாக சென்றவர்கள் பார்த்து நாங்குநேரி போலீஸ் நிலையத்திற்கு தகவல் தெரிவித்துள்ளனர்  இதையடுத்து சேரன்மகாதேவி ஏ.எஸ்.பி. ஆசித் ராவத் மற்றும் நாங்குநேரி இன்ஸ்பெக்டர் சாந்தி மற்றும் போலீசார் சம்பவ இடத்துக்கு விரைந்து  உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக நெல்லை அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.

இந்த கொலை தொடர்பாக சுடலைக்கண்ணு, அவரது தம்பி ஆறுமுகம் ஆகிய 2 பேர் மீதும் நாங்குநேரி போலீசார் வழக்கு பதிந்து தலைமறைவானவர்களை பிடிக்க தனிப்படை அமைக்கப்பட்டு தேடி வந்தனர்.இந்நிலையில் தலைமறைவான ஆறுமுகம் தூத்துக்குடி மாவட்டம்,  ஸ்ரீவைகுண்டம் குற்றவியல் நடுவர் நீதிமன்றத்தில் சரண் அடைந்தார். தொடர்ந்து அவரிடம் விசாரணை நடத்திய நீதிபதி ஆறுமுகத்தை  பாளை சிறையில் அடைக்க நீதிபதி உத்தரவு பிறப்பித்தார்.


மக்கள் கருத்து


மக்கள் பதிவு செய்யும் கருத்துகள் தணிக்கையின்றி பிரசுரமாகும் வகையில் மென்பொருள் வடிவமைக்கப்பட்டுள்ளது. தொழில்நுட்ப குறைபாடுகள் காரணமாக கருத்துக்கள் பதிவாவதில் சிறிது காலதாமதம் ஏற்பட வாய்ப்புள்ளது. வாசகர்களின் கருத்துக்களுக்கு நிர்வாகம் பொறுப்பாக மாட்டார்கள். நாகரீகமற்ற மற்றும் பிறர் மனதை புண்படுத்தகூடிய கருத்துகளை / வார்த்தைகளைப் பயன்படுத்துவதை தவிர்க்கும்படி கேட்டுக்கொள்கிறோம்.

ஆங்கிலத்தில் தட்டச்சு செய்ய Ctrl+G -ஐ அழுத்தவும்.மேலும் தொடரும் செய்திகள்

Sponsored AdsTirunelveli Business Directory