» செய்திகள் - விளையாட்டு » மாவட்ட செய்தி (திருநெல்வேலி)

திருநெல்வேலி -தாதர் ரயிலில் எல்.எச்.பி பெட்டிகள்

புதன் 11, ஜூலை 2018 6:17:12 PM (IST)திருநெல்வேலி -தாதர் விரைவு ரயிலில் ( வண்டி எண் -22630) புதிய எல்.எச்.பி பெட்டிகள்  பொருத்தப்பட்டு புதன்கிழமை முதல் இயக்கப்பட்டது.

நெல்லையிலிருந்து மும்பை தாதருக்கு வாராந்திர ரயில்கள் இரண்டு ரயில்கள் புறப்பட்டு செல்கிறது ,11022 எண் ரயில் திங்கட்கிழமை, வியாழக்கிழமை,வெள்ளிக்கிழமை ஆகிய 3 நாட்கள் இயக்கப்படுகிறது இந்த ரயில் மதுரை,ஈரோடு, சேலம்,திருப்பத்தூர்,யெஷ்வந்த்பூர் ,ஹூப்ளி,சாங்கிலி ,புனே வழியாக மும்பை தாதருக்கு செல்கிறது .இதே போல் புதன்கிழமை தோறும் வண்டி எண் -22630 திருநெல்வேலி-தாதர் அதிவிரைவு ரயில் மதுரை.,ஈரோடு,கோவை,பாலக்காடு,ஷோரனூர் , கண்ணூர்,மங்களூர் , கோவா,ரத்னகிரி,பன்வெல் வழியாக மும்பை தாதருக்கு செல்கிறது. இந்த ரயிலுக்கு மட்டும் அதிகளவில் மவுசு உள்ளது ,கேரளா,கோவா மலை தொடர் வழியாக செல்வதால் இயற்கையை ரசித்து செல்லும் பயணிகளுக்கு இந்த ரயில் வர பிரசாதமாகும். அதோடு மும்பைக்கு கொங்கன் பாதையில் மறுநாளே 5 மணி நேரம் முன்னதாக செல்வதால் இந்த ரயிலில் எபோதும் கூட்டம் காணப்படும் .

இதனிடையே இந்த ரயிலில் ஐ.சி.எப் பெட்டிகளை கொண்டே இது நாள் வரை இயக்கப்பட்டது.இந்நிலையில் புதன்கிழமை காலை 7.20 மணிக்கு அதிநவீன எல்.எச்.பி. கொண்ட புதிய பெட்டிகள் இணைக்கப்பட்டு தனது பயணத்தை துவக்கியது .இந்த புதிய பெட்டிகளில் 7  தூங்கும் வசதி கொண்ட முன்பதிவு பெட்டிகள், 3  ஏ.சி.பெட்டிகள், 3 முன்பதிவில்லாத பெட்டிகள்,2 ஜெனரேட்டர் பெட்டிகள்  என மொத்தம் 15 பெட்டிகள் இணைக்கப்பட்டு இருந்தன இந்த புதிய ரயில் பெட்டிகளில் பசுமை கழிவறை,கூடுதல் செல்போன் மற்றும் லேப்டாப் சார்ஜ் செய்யும் பிளக்குகள், அதிநவீன எல்.இ.டி விளக்குகள் ,நவீன ஜன்னல்கள் என இருந்தது.அதோடு இந்த மாதத்திற்குள் மின்சார இன்ஜின் பொருத்தப்பட்டு மங்களூர் வரை இயக்கப்பட உள்ளதாக ரயில்வே வட்டாரங்கள் தகவல் தெரிவித்துள்ளது,2 நாட்களுக்கு முன்னர் தான் திருநெல்வேலி- தாதர் சாளுக்கியா ரயில் மின்சார இன்ஜினில் இயக்கப்பட்டது குறிப்பிடதக்கது.


மக்கள் கருத்து


மக்கள் பதிவு செய்யும் கருத்துகள் தணிக்கையின்றி பிரசுரமாகும் வகையில் மென்பொருள் வடிவமைக்கப்பட்டுள்ளது. தொழில்நுட்ப குறைபாடுகள் காரணமாக கருத்துக்கள் பதிவாவதில் சிறிது காலதாமதம் ஏற்பட வாய்ப்புள்ளது. வாசகர்களின் கருத்துக்களுக்கு நிர்வாகம் பொறுப்பாக மாட்டார்கள். நாகரீகமற்ற மற்றும் பிறர் மனதை புண்படுத்தகூடிய கருத்துகளை / வார்த்தைகளைப் பயன்படுத்துவதை தவிர்க்கும்படி கேட்டுக்கொள்கிறோம்.

ஆங்கிலத்தில் தட்டச்சு செய்ய Ctrl+G -ஐ அழுத்தவும்.மேலும் தொடரும் செய்திகள்

Sponsored AdsSterlite Industries (I) Ltd
Tirunelveli Business Directory