» செய்திகள் - விளையாட்டு » மாவட்ட செய்தி (திருநெல்வேலி)

ரயில்டிரைவர் சாமர்த்தியத்தால் விபத்து தவிர்ப்பு : செங்கோட்டை அருகே பரபரப்பு

புதன் 11, ஜூலை 2018 6:59:42 PM (IST)

செங்கோட்டை அருகே ரெயில் தண்டவாளத்தில் ராட்சத மரம் விழுந்து கிடப்பதை தூரத்தில் வரும் போதே என்ஜின் டிரைவர் பார்த்து ரெயிலை சாமர்த்தியமாக நிறுத்தியதால் பெரும் விபத்து தவிர்க்கப்பட்டது. 

கொல்லத்தில் இருந்து புறப்பட்ட பாலருவி எக்ஸ்பிரஸ் ரெயில் இன்று அதிகாலை பகவதிபுரம் அருகே உட்கோணம் என்ற காட்டுப் பகுதியில் வந்து கொண்டிருந்தது. அப்போது தண்டவாளத்தில் ஒரு ராட்சத மரம் விழுந்து கிடந்தது. இதைப்பார்த்த ரெயில் என்ஜின் டிரைவர் அதிர்ச்சியடைந்தார். பின்னர் உடனடியாக ரெயிலை நிறுத்தினர். இதுகுறித்து பகவதிபுரம் ரெயில் நிலையத்திற்கு தகவல் கொடுக்கப்பட்டது. பின்னர் ரெயில்வே ஊழியர்கள், பொதுமக்கள் உதவியுடன் விழுந்த மரத்தை அகற்றும் பணியில் ஈடுபட்டனர். ஆனால் சாரல் மழை பெய்து கொண்டிருந்ததால் மீட்பு பணியில் தாமதம் ஏற்பட்டது. தொடர்ந்து கடும் போராட்டத்திற்கு பின்னர் மரம் துண்டு துண்டாக வெட்டப்பட்டு தண்டவாளத்திலிருந்து அகற்றப்பட்டது. 

இதையடுத்து பாலருவி எக்ஸ்பிரஸ் ரெயில் அங்கிருந்து சுமார் 3 மணி நேரத்திற்கு பின்னர் புறப்பட்டது. அதிகாலை நேரம் என்பதாலும், காட்டுப்பகுதியில் ரெயில் நின்றதாலும் பயணிகள் பெரிதும் சிரமத்திற்குள்ளாகினர். ரெயில் தண்டவாளத்தில் ராட்சத மரம் விழுந்து கிடப்பதை தூரத்தில் வரும் போதே என்ஜின் டிரைவர் பார்த்து ரெயிலை சாமர்த்தியமாக நிறுத்தியதால் பெரும் விபத்து தவிர்க்கப்பட்டது.


மக்கள் கருத்து


மக்கள் பதிவு செய்யும் கருத்துகள் தணிக்கையின்றி பிரசுரமாகும் வகையில் மென்பொருள் வடிவமைக்கப்பட்டுள்ளது. தொழில்நுட்ப குறைபாடுகள் காரணமாக கருத்துக்கள் பதிவாவதில் சிறிது காலதாமதம் ஏற்பட வாய்ப்புள்ளது. வாசகர்களின் கருத்துக்களுக்கு நிர்வாகம் பொறுப்பாக மாட்டார்கள். நாகரீகமற்ற மற்றும் பிறர் மனதை புண்படுத்தகூடிய கருத்துகளை / வார்த்தைகளைப் பயன்படுத்துவதை தவிர்க்கும்படி கேட்டுக்கொள்கிறோம்.

ஆங்கிலத்தில் தட்டச்சு செய்ய Ctrl+G -ஐ அழுத்தவும்.மேலும் தொடரும் செய்திகள்

Sponsored Ads
Sterlite Industries (I) LtdTirunelveli Business Directory