» செய்திகள் - விளையாட்டு » மாவட்ட செய்தி (திருநெல்வேலி)

தென்காசி அருகே பைக் - வேன் மோதல் சிறுவன் பலி : 2 பேர் காயம்

வியாழன் 12, ஜூலை 2018 10:26:13 AM (IST)

தென்காசி அருகே கணக்கப்பிள்ளை வலசையில் பைக் மீது வேன் மோதியதில் தந்தையுடன் சென்ற சிறுவன் பலியானார். மேலும் அவரது தந்தை மற்றும் சகோதரன் படுகாயம் அடைந்தனர்.

திருநெல்வேலி மாவட்டம் தென்காசி அருகே உள்ள கணக்கப்பிள்ளைவலசை கிராமத்தை சேர்ந்தவர் ராமர் ( 37). இவரது மகன்கள் மதன் (12), கதிரேசன்.  இவர்கள் 3 பேர்களும் ஒரு பைக்கில் கணக்கப்பிள்ளைவலசை அருகே உள்ள ஒரு பெட்ரோல் பங்க்கில் பெட்ரோல் நிரப்ப சென்றுள்ளனர்.அப்போது எதிர்பாராதவிதமாக அந்த வழியாக வந்த ஒரு வேன் ராமர் ஓட்டிவந்த பைக் மீது மோதியது. இதில் பைக்கில் இருந்த ராமர் மற்றும் அவரது மகன்கள் மதன், கதிரேசன் ஆகிய 3 பேர்களும் தூக்கி வீசப்பட்டனர். இதனால் 3 பேர்களும் பலத்த காயம் அடைந்தனர்.

இந்த விபத்தில் சிக்கி பலத்த காயம் அடைந்த 3 பேர்களையும் அக்கம் பக்கத்தில் உள்ளவர்கள் மீட்டு உடனடியாக தென்காசி அரசு மருத்துவமனையில் சேர்த்தனர். அங்கு 3 பேர்களுக்கும் சிகிச்சை அளிக்கப்பட்ட நிலையில் மதன் மட்டும் மேல் சிகிச்சைக்காக பாளை அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைக்கப்பட்டார்.; அங்கு தீவிர சிகிச்சை பிரிவில் அனுமதிக்கப்பட்ட மதன் சிகிச்சை பலனின்றி இறந்தார். இச்சம்பவம் குறித்து இலத்தூர் காவல் நிலையத்தில் புகார் செய்யப்பட்டது. போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். 


மக்கள் கருத்து


மக்கள் பதிவு செய்யும் கருத்துகள் தணிக்கையின்றி பிரசுரமாகும் வகையில் மென்பொருள் வடிவமைக்கப்பட்டுள்ளது. தொழில்நுட்ப குறைபாடுகள் காரணமாக கருத்துக்கள் பதிவாவதில் சிறிது காலதாமதம் ஏற்பட வாய்ப்புள்ளது. வாசகர்களின் கருத்துக்களுக்கு நிர்வாகம் பொறுப்பாக மாட்டார்கள். நாகரீகமற்ற மற்றும் பிறர் மனதை புண்படுத்தகூடிய கருத்துகளை / வார்த்தைகளைப் பயன்படுத்துவதை தவிர்க்கும்படி கேட்டுக்கொள்கிறோம்.

ஆங்கிலத்தில் தட்டச்சு செய்ய Ctrl+G -ஐ அழுத்தவும்.மேலும் தொடரும் செய்திகள்

Sponsored AdsSterlite Industries (I) Ltd
Tirunelveli Business Directory