» செய்திகள் - விளையாட்டு » மாவட்ட செய்தி (திருநெல்வேலி)

முத்துகிருஷ்ணபேரி-துத்திகுளம் இடையே சாலைப்பணி பிரபாகரன் எம்.பி. தொடங்கி வைத்தார்

வியாழன் 12, ஜூலை 2018 10:58:19 AM (IST)முத்துகிருஷ்ணபேரி-துத்திகுளம் இடையே ரூ.3.20 கோடியில் சாலை அமைக்கும் பணியை கே.ஆர்.பி. பிரபாகரன் எம்.பி. தொடங்கி வைத்தார்.

முத்துகிருஷ்ணபேரியில் இருந்து துத்திகுளம் வரையிலான 5 கி.மீ. சாலையை சீரமைத்து தரும் படி அப்பகுதி மக்கள் பிரபாகரன் எம்.பி.யிடம் கோரிக்கை விடுத்து வந்தனர். இதையடுத்து அவரது முயற்சியின் பேரில் ஒருங்கிணைந்த சாலை மேம்பாட்டு திட்டத்தின் கீழ் புதிய சாலை அமைக்க ரூ.3.20 கோடி ஒதுக்கீடு செய்யப்பட்டு, இதற்கான பணி துவக்க விழா நடைபெற்றது. பிரபாகரன் எம்.பி. பணியை தொடங்கி வைத்தார்.

நிகழ்ச்சியில் நிகழ்ச்சியில் நெடுஞ்சாலைத்துறை கோட்ட பொறியாளர் விஜயலட்சுமி, உதவி கோட்ட பொறியாளர் பிரபாகரன் பிரின்ஸ், உதவி பொறியாளர் அரிமுகுந்தன், சாலை ஆய்வாளர் மாரித்துரை, ஒப்பந்தக்காரர் சண்முகவேலு, இளைஞர் பாசறை மாவட்ட செயலாளர் சேர்மபாண்டி, அதிமுக நிர்வாகிகள் ஜெயராமன், வக்கீல் ராஜன், மதியழகன், இராதா, தியாகராஜன், கணேசன், தீப்பொறி அப்பாத்துரை, சரவணன், ராசையா உள்பட பலர் கலந்து கொண்டனர்.


மக்கள் கருத்து


மக்கள் பதிவு செய்யும் கருத்துகள் தணிக்கையின்றி பிரசுரமாகும் வகையில் மென்பொருள் வடிவமைக்கப்பட்டுள்ளது. தொழில்நுட்ப குறைபாடுகள் காரணமாக கருத்துக்கள் பதிவாவதில் சிறிது காலதாமதம் ஏற்பட வாய்ப்புள்ளது. வாசகர்களின் கருத்துக்களுக்கு நிர்வாகம் பொறுப்பாக மாட்டார்கள். நாகரீகமற்ற மற்றும் பிறர் மனதை புண்படுத்தகூடிய கருத்துகளை / வார்த்தைகளைப் பயன்படுத்துவதை தவிர்க்கும்படி கேட்டுக்கொள்கிறோம்.

ஆங்கிலத்தில் தட்டச்சு செய்ய Ctrl+G -ஐ அழுத்தவும்.மேலும் தொடரும் செய்திகள்

Sponsored AdsTirunelveli Business Directory