» செய்திகள் - விளையாட்டு » மாவட்ட செய்தி (திருநெல்வேலி)

சிஐடியு போக்குவரத்து தொழிலாளர் சங்கம் ஆர்ப்பாட்டம்

வியாழன் 12, ஜூலை 2018 5:31:23 PM (IST)



நெல்லையில் சி.ஐ.டி.யு போக்குவரத்து தொழிலாளர் சங்கம் ஆர்ப்பாட்டம் நடத்தினர்.

கரூர் அரசு போக்குவரத்து கிளை முன்பு நடைபெற்ற வாயிற்கூட்டத்தில் பேசிய சி.ஐ.டி.யு நிர்வாகிகளை கிளை மேலாளரின் புகாரின் பேரில் கைது செய்த பசுபதி பாளையம் காவல் ஆய்வாளரை கண்டித்தும் கிளை மேலாளர் மீது நடவடிக்கை எடுக்க கோரியும் தமிழகம் முழுவதும் அனைத்து பணிமனைகளின் முன்பு சி.ஐ.டி.யு போக்குவரத்து தொழிலாளர் சங்கம் ஆர்ப்பாட்டம் நடத்தியது .நெல்லையில் தாமிரபரணி டெப்போ முன்பு நடைபெற்ற ஆர்ப்பாட்டத்திற்கு எம்.சுப்பிரமணியன் தலைமை தாங்கினார் ,மாநில குழு உறுப்பினர் பெருமாள் ஆர்ப்பாட்டத்தை துவக்கி வைத்து பேசினார்.சங்க நிர்வாகிகள் பாலசுப்பிரமணியன், மணி ,சரவணமுத்து, காசிராஜன்,கணேஷ் ஆகியோர் கோரி க்கைகளை வலியுறுத்தி பேசினர். சங்க மாவட்ட பொது செயலாளர் ஜோதி நிறைவுரையாற்றினார் ,ஆர்ப்பாட்டத்தில் ஏராளமானோர் கலந்து கொண்டனர்.


மக்கள் கருத்து


மக்கள் பதிவு செய்யும் கருத்துகள் தணிக்கையின்றி பிரசுரமாகும் வகையில் மென்பொருள் வடிவமைக்கப்பட்டுள்ளது. தொழில்நுட்ப குறைபாடுகள் காரணமாக கருத்துக்கள் பதிவாவதில் சிறிது காலதாமதம் ஏற்பட வாய்ப்புள்ளது. வாசகர்களின் கருத்துக்களுக்கு நிர்வாகம் பொறுப்பாக மாட்டார்கள். நாகரீகமற்ற மற்றும் பிறர் மனதை புண்படுத்தகூடிய கருத்துகளை / வார்த்தைகளைப் பயன்படுத்துவதை தவிர்க்கும்படி கேட்டுக்கொள்கிறோம்.

ஆங்கிலத்தில் தட்டச்சு செய்ய Ctrl+G -ஐ அழுத்தவும்.



மேலும் தொடரும் செய்திகள்

Sponsored Ads







Tirunelveli Business Directory