» செய்திகள் - விளையாட்டு » மாவட்ட செய்தி (திருநெல்வேலி)

குற்றச்செயல்களை தடுக்க போலீசார் பிரச்சாரம்

வெள்ளி 13, ஜூலை 2018 10:25:40 AM (IST)குற்றச்செயல்களை தடுக்க போலீசார் சுரண்டையில் விழிப்புணர்வு பிரச்சாரம் நடத்தினர்.

நெல்லைமாவட்டத்தில் குற்றச்செயல்களை தடுக்க பாேலீசார் பல்வேறு தடுப்பு நடவடிக்கைளை எடுத்து வருகின்றனர். இந் நிலையில் நெல்லை எஸ் .பி .அருண் சக்திகுமார் ,ஆலங்குளம் டி .எஸ்.பி .ரமேஷ், சுரண்டை காவல் ஆய்வாளர் மாரீஸ்வரி ஆலோசனையின் பேரில் சுரண்டை தற்காலிக பேருந்து நிலையத்தில் பஸ்சுக்காக காத்திருந்த பயணிகள் மற்றும் பொதுமக்கள் அதிகளவு கூடும் இடங்களில் சுரண்டை எஸ்.ஐ .விஜயகுமார்  திருட்டு வழிப்பறி சம்பவங்களை தடுப்பதில் பொது மக்களின் ஒத்துழைப்பு போக்குவரத்து விதிகள் ,ஹெல்மெட் அணிவதன் அவசியம் குறித்தும் ,விபத்து ஏற்பட்டால் முதலுதவி அளிப்பது குறித்தும்  விளக்கி கூறினார் .

மேலும் பெண்கள் தங்களுக்கு ஏற்படும் பிரச்சினைகளுக்கு  தைரியமாக காவல் நிலையத்தை அணுக வேண்டும் .அப்போதுதான் குற்றங்கள் குறையும் ,சட்டத்துக்கு புறம்பான செயல்களில் ஈடுபடுபவர்கள்  குறித்தும் காவல் நிலையத்துக்கு தகவல் தெரிவிக்க வேண்டும் .தகவல் தெரிவிப்பவர்கள் குறித்து எந்த தகவலும் வெளியிடப்படாது என கூறினார் .இதில் எஸ்.எஸ்.ஐ .கற்பகவிநாயகம் ,தலைமை காவலர்கள் சாலமன் , குத்தாலிங்கம் மற்றும் காவலர்கள் உடன் இருந்தனர்.


மக்கள் கருத்து


மக்கள் பதிவு செய்யும் கருத்துகள் தணிக்கையின்றி பிரசுரமாகும் வகையில் மென்பொருள் வடிவமைக்கப்பட்டுள்ளது. தொழில்நுட்ப குறைபாடுகள் காரணமாக கருத்துக்கள் பதிவாவதில் சிறிது காலதாமதம் ஏற்பட வாய்ப்புள்ளது. வாசகர்களின் கருத்துக்களுக்கு நிர்வாகம் பொறுப்பாக மாட்டார்கள். நாகரீகமற்ற மற்றும் பிறர் மனதை புண்படுத்தகூடிய கருத்துகளை / வார்த்தைகளைப் பயன்படுத்துவதை தவிர்க்கும்படி கேட்டுக்கொள்கிறோம்.

ஆங்கிலத்தில் தட்டச்சு செய்ய Ctrl+G -ஐ அழுத்தவும்.மேலும் தொடரும் செய்திகள்

Sponsored AdsSterlite Industries (I) Ltd
Tirunelveli Business Directory