» செய்திகள் - விளையாட்டு » மாவட்ட செய்தி (திருநெல்வேலி)

உரதட்டுப்பாடு நெல்லை விவசாயிகள் குற்றச்சாட்டு

வெள்ளி 20, ஜூலை 2018 2:23:47 PM (IST)

நெல்லை மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் நடைபெற்ற விவசாயிகள் குறைதீர்க்கும் நாள் கூட்டத்தில் உரதட்டுபாடு ஏற்பட்டுள்ளதாக விவசாயிகள் குற்றம் சாட்டினார். 
 
நெல்லை மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் விவசாயிகள் குறைதீர்க்கும் நாள் கூட்டம் நடைபெற்றது.இதில் சிறு குறு விவசாயிகள் சான்று பெற தாசில்தார் ரூ.ஆயிரம் லஞ்சம் கேட்பதாக மாவட்ட ஆட்சியரிடம் விவசாயிகள் புகார் அளித்தனர். உரதட்டுபாடு தட்டுபாடு ஏற்பட்டுள்ளதாகவும் விவசாயிகள் குற்றசாட்டு எழுப்பினர்.சங்கரன்கோவில் வெண்றிலிங்கபுரம் பகுதியில் உள்ள விவசாயிகள் சிறு குரு விவசாயிகள் சொட்டு நீர் பாசனத்திற்காக சிறு குரு விவசாயிகள் என சான்று பெறுவதற்கு சங்கரன்கோவில் தாசில்தார் அவர்களிடம் நாங்கள் மனு அளித்தோம் ஆனால் தாசில்தார் அவர்கள் ஒரு நபருக்கு ஆயிரம் ரூபாய் லட்சம் கொடுக்க வேண்டும் என்று தங்களை வற்புறுத்ததுவதாகவும் பல மாதங்களாக தாங்கள் அலைக்கழிக்க்பபடுவதாகவும் புகார் தெரிவித்தனர் 

மேலும் கடனாநதி பகுதியில் கல்குவாரிகள் அமைக்கப்பட்டுள்ளதால் விவசாயம் பாதிக்கப்படுவதோடு அணைகளும் பாதிக்கப்படுகின்றது. அதனால் கல்குவாரிகளுக்கான அனுமதிகளை ரத்து செய்ய வேண்டும் என்றும் கோரிக்கை வைத்தனர். மேலும் நெல்லை மாவட்டம் முழுவதும் டிஏபி மற்றும் யூரியா உரங்கள் தட்டுபாடு ஏற்பட்டு உள்ளதாகவும் ஆனால் அது குறித்து அதிகாரிகளிடம் கேட்டால் முறையான பதில் அளிக்க வில்லை அதனால் உரதட்டுபாடு ஏற்படாமல் இருக்க தக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றும் மாவட்ட ஆட்சியரிடம் கோரிக்கை வைத்தனர் இது குறித்து விவசாயிகள் தெரிவிக்கும் போது மாவட்ட நிர்வாகம் தகுந்த நடவடிக்கை எடுக்காவிட்டால் நாங்கள் போராட்டம் நடத்த போவதாகவும் விவசாயிக்ள தெரிவித்தனர்.


மக்கள் கருத்து


மக்கள் பதிவு செய்யும் கருத்துகள் தணிக்கையின்றி பிரசுரமாகும் வகையில் மென்பொருள் வடிவமைக்கப்பட்டுள்ளது. தொழில்நுட்ப குறைபாடுகள் காரணமாக கருத்துக்கள் பதிவாவதில் சிறிது காலதாமதம் ஏற்பட வாய்ப்புள்ளது. வாசகர்களின் கருத்துக்களுக்கு நிர்வாகம் பொறுப்பாக மாட்டார்கள். நாகரீகமற்ற மற்றும் பிறர் மனதை புண்படுத்தகூடிய கருத்துகளை / வார்த்தைகளைப் பயன்படுத்துவதை தவிர்க்கும்படி கேட்டுக்கொள்கிறோம்.

ஆங்கிலத்தில் தட்டச்சு செய்ய Ctrl+G -ஐ அழுத்தவும்.மேலும் தொடரும் செய்திகள்

Sponsored Ads
Sterlite Industries (I) LtdTirunelveli Business Directory