» செய்திகள் - விளையாட்டு » மாவட்ட செய்தி (திருநெல்வேலி)

திருவனந்தபுரம் - மங்களூர் எக்ஸ்பிரஸ் ரயில் : நெல்லை வரை நீட்டிக்க கோரிக்கை

வெள்ளி 20, ஜூலை 2018 7:19:49 PM (IST)

திருவனந்தபுரத்திலிருந்து மங்களூருக்கு இயக்கப்படும் எக்ஸ்பிரஸ் ரயிலை நாகர்கோவில் வழியாக நெல்லை சந்திப்பு வரை நீட்டிப்பு செய்தால் பொதுமக்களுக்கும்,வியாபாரிகளுக்கும் பயன் உள்ளதாக அமையும் என வணிகர் சங்கத்தினர் கோரிக்கை விடுத்துள்ளனர். 

இது தொடர்பாக தமிழ்நாடு வணிகர் சங்கங்களின் பேரவையின் குமரி மாவட்டத் தலைவரான கருங்கல் ஜார்ஜ் மத்திய ரயில்வே அமைச்சருக்கு அனுப்பி உள்ள மனுவில், அடுத்த மாதம் ரயில் காலஅட்டவணை வெளியிடப்பட இருக்கிறது. இந்த நிலையில் நெல்லை, குமரி மாவட்ட மக்களின் வசதியை கவனத்தில் கொண்டு கூடுதல் ரயில்களை இயக்க வேண்டும். நெல்லை, கோவில்பட்டி, விருதுநகர், கோட்டார், வடசேரி உள்ளிட்ட இடங்களிலிருந்து கேரளாவுக்கு சரக்குகள் கொண்டு செல்லப்படுகின்றன. 

திருவனந்தபுரம் - நாகர்கோவில் இடையே இயக்கப்பட்டு வரக்கூடிய பயணிகள் ரயிலை நெல்லை வரை நீட்டிக்க வேண்டும். இதன் மூலம் நெல்லையிலிருந்து நாகர்கோவில் வழியாக திருவனந்தபுரத்துக்கு பகல் நேர பயணத்துக்கு வசதி ஏற்படும். இதன் மூலமாக நெல்லை, குமரி மாவட்ட விவசாயிகள், வணிகர்கள் மட்டுமல்லாமல் இரு மாவட்டங்களிலும் இருந்து அலுவலகங்களுக்குச் செல்பவர்களுக்கும் உதவியாக அமையும்.

அதனால் இந்தக் கோரிக்கைகளை மத்திய ரயில்வே துறை பரிசீலித்து, அடுத்த மாதம் வெளியாகவுள்ள புதிய கால அட்டவணையில் இந்த ரயில்களை இணைத்து எங்களது கோரிக்கைகளை நிறைவேற்றித் தர வேண்டும் எனக் குறிப்பிட்டுள்ளார். 


மக்கள் கருத்து


மக்கள் பதிவு செய்யும் கருத்துகள் தணிக்கையின்றி பிரசுரமாகும் வகையில் மென்பொருள் வடிவமைக்கப்பட்டுள்ளது. தொழில்நுட்ப குறைபாடுகள் காரணமாக கருத்துக்கள் பதிவாவதில் சிறிது காலதாமதம் ஏற்பட வாய்ப்புள்ளது. வாசகர்களின் கருத்துக்களுக்கு நிர்வாகம் பொறுப்பாக மாட்டார்கள். நாகரீகமற்ற மற்றும் பிறர் மனதை புண்படுத்தகூடிய கருத்துகளை / வார்த்தைகளைப் பயன்படுத்துவதை தவிர்க்கும்படி கேட்டுக்கொள்கிறோம்.

ஆங்கிலத்தில் தட்டச்சு செய்ய Ctrl+G -ஐ அழுத்தவும்.மேலும் தொடரும் செய்திகள்

Sponsored AdsSterlite Industries (I) Ltd
Tirunelveli Business Directory