» செய்திகள் - விளையாட்டு » மாவட்ட செய்தி (திருநெல்வேலி)

பாளையங்கோட்டை தனியார் பள்ளி தீவிபத்து எதிரொலி : சுரண்டை பள்ளிகளில் தாசில்தார் ஆய்வு

வெள்ளி 20, ஜூலை 2018 7:54:36 PM (IST)திருநெல்வேலி பள்ளி தீவிபத்து எதிரொலியாக சுரண்டை  பகுதி பள்ளி கட்டிடங்களை தாசில்தார் அதிரடி ஆய்வு செய்தார்.

நெல்லை பாளையங்கோட்டையில் உள்ள ரோஸ்மேரி பள்ளியின் கட்டிடத்தில் திடீர் தீ விபத்து ஏற்பட்டது. அதில் அதிர்ஷ்டவசமாக மாணவர்கள் தப்பினர். இதனை தொடர்ந்து நெல்லை மாவட்டம் முழுவதுமுள்ள பள்ளி கட்டிடங்கள் மற்றும் பொதுமக்கள் கூடும் இடங்களின் கட்டிடங்கள் உரிய வசதியுடன் அனுமதி பெற்று கட்டப்பட்டுள்ளதா என ஆய்வு செய்து நடவடிக்கை எடுக்க மாவட்ட ஆட்சியர் ஷில்பா பிரபாகர்சதீஷ் உத்தரவிட்டார். அதனை தொடர்ந்து மாவட்டம் முழுவதும் அதிரடி சோதனைகள் நடந்து வருகின்றன. இதனை முன்னிட்டு சுரண்டை பகுதிகளில் உள்ள பள்ளி கட்டிடங்கள், திரையரங்குகள், திருமண மண்டபங்கள், சமுதாய நலக்கூடங்கள், வணிக வளாகங்கள் மற்றும் பொதுமக்கள் அதிகளவு கூடும் இடங்களை வீரகேரளம்புதூர் தாசில்தார் நல்லையா அதிரடி ஆய்வு மேற்க்கொண்டார்.

தொடர்ந்து மேற்க்கண்ட இடங்களில் ஊராட்சி துறையின் கட்டிட அனுமதியுடன், அரசு பொறியாளரிடம் பெறப்பட்ட கட்டிட உறுதி சான்று, தீயணைப்பு துறையினரின் தடையின்மை சான்று, சுகாதார சான்றுடன் உரிய கட்டணம் செலுத்தி கட்டிட உரிமை சான்று பெற வேண்டும். விசாலமான பாதை அவசரவழி, தீ தடுப்பு கருவிகள் வாங்கி முறையாக பராமரிக்க வேண்டும் என அறிவுறுத்தியதுடன் விதிமுறைகளை பின்பற்றாத கட்டிடங்களின் உரிமையாளர்கள் மீது கடும் நடவடிக்கை எடுக்கப்படுமென தெரிவித்தார். ஆய்வு மேற்க்கொண்ட தாசில்தாருடன் மண்டல துணை தாசில்தார் அருணாசலம்  ஆர்ஐ பாலகிருஷ்ணன், விஏஓ சங்கரநாராயணன், உதவியாளர் கற்ப்பகம் உள்ளிட்ட வருவாய்த்துறையினர் இருந்தனர்.


மக்கள் கருத்து


மக்கள் பதிவு செய்யும் கருத்துகள் தணிக்கையின்றி பிரசுரமாகும் வகையில் மென்பொருள் வடிவமைக்கப்பட்டுள்ளது. தொழில்நுட்ப குறைபாடுகள் காரணமாக கருத்துக்கள் பதிவாவதில் சிறிது காலதாமதம் ஏற்பட வாய்ப்புள்ளது. வாசகர்களின் கருத்துக்களுக்கு நிர்வாகம் பொறுப்பாக மாட்டார்கள். நாகரீகமற்ற மற்றும் பிறர் மனதை புண்படுத்தகூடிய கருத்துகளை / வார்த்தைகளைப் பயன்படுத்துவதை தவிர்க்கும்படி கேட்டுக்கொள்கிறோம்.

ஆங்கிலத்தில் தட்டச்சு செய்ய Ctrl+G -ஐ அழுத்தவும்.மேலும் தொடரும் செய்திகள்

Sponsored Ads
Sterlite Industries (I) LtdTirunelveli Business Directory