» செய்திகள் - விளையாட்டு » மாவட்ட செய்தி (திருநெல்வேலி)

நெல்லையில் ஆட்டோ ஓட்டுனர்கள் ஆர்ப்பாட்டம்

சனி 21, ஜூலை 2018 6:57:41 PM (IST)
நெல்லையில் பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி சி.ஐ.டி.யு ஆட்டோ ஓட்டுனர்கள் சங்கம் ஆர்ப்பாட்டம் நடத்தியது.

பெட்ரோல்,டீசல் விலை உயர்வை திரும்ப பெற வேண்டும்,விலையை தீர்மானிக்கும் அதிகாரத்தை அரசே நடத்திட வேண்டும்,பெட்ரோல்-டீசல் விலையை ஜி.எஸ்.டி வரம்புக்குள் கொண்டு வர வேண்டும்,மானிய விலையில் ஆட்டோக்களுக்கு பெட்ரோல்-டீசல் வழங்க வேண்டும், உயர்த்தப்பட்ட அநியாய இன்சூரன்ஸ் கட்டணத்தை வாபஸ் பெற வேண்டும், வீட்டுவசதி வாரிய குடியிருப்பில் 10சதவீத வீட்டுமனைகளை ஆட்டோ ஓட்டுனர்களுக்கு வழங்கிட வேண்டும்,இ.எஸ்.ஐ. வசதிகளை செய்து தர வேண்டும்,மாவட்ட எல்லைகளில் இருக்கும் ஆட்டோ நிறுத்தங்கள் பக்கத்து மாவட்டங்களுக்கு சென்று வர அனுமதி தர வேண்டும் போன்ற கோரிக்கைகளை வலியுறுத்தி சி.ஐ.டி.யு ஆட்டோ ஓட்டுனர்கள் சங்கம் வண்ணாரப்பேட்டையில் ஆர்ப்பாட்டம் நடத்தியது.

ஆர்ப்பாட்டத்திற்கு சங்க மாவட்ட தலைவர் டி.காமராஜ் தலைமை தாங்கினார் ,சம்மேளன குழு உறுப்பினர்கள் தேவி,சுரேஷ் ஆகியோர் முன்னிலை வகித்தனர் ,சி.ஐ.டி.யு மாவட்ட செயலாளர் ஆர்.மோகன் ஆர்ப்பாட்டத்தை துவக்கி வைத்து பேசினார்.சி.ஐ.டி.யு மாநில குழு உறுப்பினர் பெருமாள், சாலைபோக்குவரத்து தொழிலாளர் சங்க மாவட்ட பொது செயலாளர் ஜான் றோஸ், அரசு போக்குவரத்து தொழிலாளர் சங்க பொது செயலாளர் ஜோதி,ஆட்டோ ஓட்டுநர் சங்க மாவட்ட பொது செயலாளர் முருகன் ஆகியோர் கோரிக்கைகளை விளக்கி பேசினர் .சிஐடியு மாவட்ட துணை தலைவர் முருகன் நிறைவுரையாற்றினார், சங்க மாவட்ட துணை செயலாளர் அற்புத ஜெகன் பிரகாஷ் நன்றி கூறினார் ,ஆர்ப்பாட்டத்தில் 300 பேர் கலந்து கொண்டனர்.


மக்கள் கருத்து


மக்கள் பதிவு செய்யும் கருத்துகள் தணிக்கையின்றி பிரசுரமாகும் வகையில் மென்பொருள் வடிவமைக்கப்பட்டுள்ளது. தொழில்நுட்ப குறைபாடுகள் காரணமாக கருத்துக்கள் பதிவாவதில் சிறிது காலதாமதம் ஏற்பட வாய்ப்புள்ளது. வாசகர்களின் கருத்துக்களுக்கு நிர்வாகம் பொறுப்பாக மாட்டார்கள். நாகரீகமற்ற மற்றும் பிறர் மனதை புண்படுத்தகூடிய கருத்துகளை / வார்த்தைகளைப் பயன்படுத்துவதை தவிர்க்கும்படி கேட்டுக்கொள்கிறோம்.

ஆங்கிலத்தில் தட்டச்சு செய்ய Ctrl+G -ஐ அழுத்தவும்.மேலும் தொடரும் செய்திகள்

Sponsored Ads
Sterlite Industries (I) LtdTirunelveli Business Directory