» செய்திகள் - விளையாட்டு » மாவட்ட செய்தி (திருநெல்வேலி)

திருநெல்வேலிக்கு வந்த மகேந்திரசிங் தோனி : பல்வேறு நிகழ்ச்சிகளில் பங்கேற்கிறார்

சனி 4, ஆகஸ்ட் 2018 5:45:13 PM (IST)

இந்திய கிரிக்கெட் அணியின் முன்னாள் கேப்டன் மகேந்திர சிங் தோனி இன்று திருநெல்வேலி வந்துள்ளார்.

இந்தியா சிமென்ட்ஸின் முதல் தொழிற்சாலை திருநெல்வேலியில் உள்ள தாழையூத்து என்னும் இடத்தில் 1946-ம் ஆண்டு நிறுவப்பட்டது.  இந்தியா சிமென்ட்ஸ் தொழிற்சாலையில் நீண்ட காலம் பணியாற்றி ஓய்வுபெறுபவர்கள் மற்றும் சிறப்பான சாதனைகளைப் படைத்தவர்களுக்கு தோனி பரிசுகள் வழங்கி கெளரவிக்க இருக்கிறார்.

அதோடு திருநெல்வேலியில் இன்று நடைபெற இருக்கும் கோவை கிங்ஸுக்கும், மதுரை பேந்தர்ஸுக்கும் இடையிலான போட்டியை டாஸ் போட்டு தொடங்கிவைக்க இருக்கிறார் தோனி. தோனி திருநெல்வேலிக்கு வந்திருப்பதால் பாதுகாப்பு ஏற்பாடுகள் பலப்படுத்தப்பட்டிருக்கின்றன. அவர் குண்டாறு அணையில் குளித்து மகிழ்ந்தது குறிப்பிடத்தக்கது. தோனிக்கு சிறப்பான தென் இந்திய உணவுகள் தயாரித்து தரவும் ஏற்பாடுகள் செய்யப்பட்டிருக்கின்றன.


மக்கள் கருத்து


மக்கள் பதிவு செய்யும் கருத்துகள் தணிக்கையின்றி பிரசுரமாகும் வகையில் மென்பொருள் வடிவமைக்கப்பட்டுள்ளது. தொழில்நுட்ப குறைபாடுகள் காரணமாக கருத்துக்கள் பதிவாவதில் சிறிது காலதாமதம் ஏற்பட வாய்ப்புள்ளது. வாசகர்களின் கருத்துக்களுக்கு நிர்வாகம் பொறுப்பாக மாட்டார்கள். நாகரீகமற்ற மற்றும் பிறர் மனதை புண்படுத்தகூடிய கருத்துகளை / வார்த்தைகளைப் பயன்படுத்துவதை தவிர்க்கும்படி கேட்டுக்கொள்கிறோம்.

ஆங்கிலத்தில் தட்டச்சு செய்ய Ctrl+G -ஐ அழுத்தவும்.மேலும் தொடரும் செய்திகள்

Sponsored Ads

Sterlite Industries (I) Ltd
Tirunelveli Business Directory