» செய்திகள் - விளையாட்டு » மாவட்ட செய்தி (திருநெல்வேலி)

தூத்துக்குடியில் அங்கன்வாடிகள் நவீன மயமாக்கம்: பணிகள் விரைவில் துவங்கும்.. ஆணையர் தகவல்!

வியாழன் 9, ஆகஸ்ட் 2018 5:13:14 PM (IST)

தூத்துக்குடியில் உள்ள அங்கன்வாடிகளை நவீன மயமாக்கும் பணிகள் விரைவில் துவங்க உள்ளதாக ஆணையர் டாக்டர்.ஆல்பி ஜான் வர்க்கீஸ் தெரிவித்துள்ளார். 

இது தொடர்பாக அவர் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பு: தூத்துக்குடி மாநகரப் பகுதிகளில் அழகேசபுரம், வடக்கு பத்திரகாளியம்மன் கோவில் தெரு, சாமுவேல்புரம், செல்வநாயகபுரம், கே.வி.கே. நகர், ரகுமத்துல்லா புரம், சாரங்கபாணி தெரு, சத்திரம் தெரு, டூவிபுரம், வி.வி.டி. பூங்கா, மங்களபுரம், சுப்பையா பூங்கா, திரேஸ்புரம் மற்றும் வரதராஜபுரம் ஆகிய இடங்களில் அமைந்துள்ள 22 அங்கன்வாடி மையங்களில் அனைத்து அம்சங்களுடன் நவீனமயமாக்கப்பட உள்ளது.

சுத்திகரிக்கப்பட்ட குடிநீர், மின்வசதி, இருக்கை வசதிகள், குழந்தைகளின் வருகையினை உறுதி செய்வதற்கான பயோமெட்ரிக் வசதி, எல்.இ.டி. டி.வி., குழந்தைகளின் மனதைக் கவரும் வகையிலான வண்ணமிகு ஒவியங்கள், பசுமை நிறைந்த காற்றோட்டமான அறைகள் மற்றும் கழிப்பிட வசதிகள் என அனைத்து அம்சங்களுடன் கூடிய நவீனமயமான அங்கன்வாடி மையங்கள் அமைப்பதற்கு திட்ட அறிக்கை தயார் செய்யப்பட்டுள்ள நிலையில், மேற்படி பணிகள் விரைவில் துவங்கப்படவுள்ளதாகவும், இதனைத் தொடர்ந்து மாநகராட்சிக்குச் சொந்தமான இடங்களில் அமைந்துள்ள மீதமுள்ள அங்கன்வாடிகளும் மேலே குறிப்பிட்ட அனைத்து வசதிகளுடன் புதுப்பிக்கப்படுமெனவும் மாநகராட்சி ஆணையர் (ம) தனி அலுவலர் டாக்டர்.ஆல்பி ஜான் வர்க்கீஸ் தெரிவித்துள்ளார்.


மக்கள் கருத்து

பிரபாகர் BenedictAug 10, 2018 - 11:19:04 AM | Posted IP 162.1*****

The grave next to Central Police Station adjoining the English Church, and the area near Chatram bus stop are all being used by anti-social elements for drug trade and other activities. Please identify such locations and demolish all these places and rejuvenate them similar to the one near Cruz Fernando statue.

makkalAug 9, 2018 - 05:52:56 PM | Posted IP 162.1*****

எல்லா ரோடு ஒழுங்கா போடுங்க.அழகர் ஸ்கூல் கு போற வழி ரோடு மிகவும் மோசமாக உள்ளது.

மக்கள் பதிவு செய்யும் கருத்துகள் தணிக்கையின்றி பிரசுரமாகும் வகையில் மென்பொருள் வடிவமைக்கப்பட்டுள்ளது. தொழில்நுட்ப குறைபாடுகள் காரணமாக கருத்துக்கள் பதிவாவதில் சிறிது காலதாமதம் ஏற்பட வாய்ப்புள்ளது. வாசகர்களின் கருத்துக்களுக்கு நிர்வாகம் பொறுப்பாக மாட்டார்கள். நாகரீகமற்ற மற்றும் பிறர் மனதை புண்படுத்தகூடிய கருத்துகளை / வார்த்தைகளைப் பயன்படுத்துவதை தவிர்க்கும்படி கேட்டுக்கொள்கிறோம்.

ஆங்கிலத்தில் தட்டச்சு செய்ய Ctrl+G -ஐ அழுத்தவும்.மேலும் தொடரும் செய்திகள்


Sponsored Ads
Tirunelveli Business Directory