» செய்திகள் - விளையாட்டு » மாவட்ட செய்தி (திருநெல்வேலி)
தூத்துக்குடி மாநகராட்சி பூங்காக்களில் திறந்தவெளி ஜிம் வசதி : விரைவில் அறிமுகம்
வியாழன் 9, ஆகஸ்ட் 2018 5:26:06 PM (IST)
தூத்துக்குடி மாநகராட்சி பூங்காக்களில் வெளிநாடுகளில் உள்ளது போல் திறந்தவெளி ஜிம் அமைக்கப்படும் என மாநகராட்சி நிர்வாகம் தெரிவித்துள்ளது.
தூத்துக்குடி மாநகரப் பகுதிகளில் அமைந்துள்ள பூங்கா இடங்களை பல்வேறு திட்டத்தின் கீழ் அபிவிருத்தி மற்றும் புதிதாக அமைக்கும் பணிகள் தற்போது நடைபெற்று வருகிறது. இதன் காரணமாக மாநகராட்சி பூங்காக்களுக்கு பொது மக்களின் வருகை அதிகரித்துள்ளது. குறிப்பாக இளம் பருவத்தினர் நடை பயிற்சி, மற்றும் உடற்பயிற்சி மேற்கொள்ளும் பொருட்டு காலை, மாலை வேளைகளில் பூங்காவிற்கு வருகை தருகின்றனர்.
ஆரோக்கியத்தை மேம்படுத்த வருகை தரும் இளம் சமுதாயத்தினரை ஊக்குவிக்கும் விதமாகவும் உடற்பயிற்சியின் அவசியம் குறித்து பொதுமக்களிடம் விழிப்புணர்வு ஏற்படுத்தவும் உடற்பயிற்சி கருவிகள் மற்றும் உபகரணங்களுடன் ரூ. 35.50 இலட்சம் மதிப்பீட்டில் முத்து நகர் கடற்கரை பூங்கா, ரோச் பூங்கா, இராஜாஜி பூங்கா மற்றும் எம்.ஜி.ஆர். பூங்கா ஆகியவற்றில் வெளிநாடுகளுக்கு இணையாக Open Gym உடற்பயிற்சி நிலையங்கள் அமைத்திட திட்டமிடப்பட்டுள்ளது. மேற்படி பணிகள் விரைவில் துவங்கப்பட்டு பொதுமக்கள் பயன்பாட்டிற்கு கொண்டு வரப்படுமென மாநகராட்சி ஆணையர் தெரிவித்தார்.
புதுப்பொலிவு பெறும் தூத்துக்குடி ரோச் பூங்கா
தூத்துக்குடி மாநகராட்சி சார்பில் அரசின் பல்வேறு திட்டங்களின் வாயிலாக மாநகரத்திற்கு தேவையான கட்டமைப்பு வசதிகள் ஏற்படுத்தப்பட்டு வருகிறது. இதில் பொதுமக்கள் தங்கள் நேரத்தை இனிமையாக கழித்திட ஏதுவாக மாநகரில் உள்ள பூங்காக்கள் அனைத்திலும் அபிவிருத்தி பணிகள் மேற்கொள்ளப்பட்டு வருகிறது. எனவே பொதுமக்கள் அதிகளவில் பயன்படுத்தப்படும் கற்கரையோர பூங்காவான ரோச் பூங்காவினை அம்ரூத் திட்டத்தின் மூலம் ரூ. 86.70 இலட்சம் மதிப்பிட்டில் புதுப்பிக்க திட்டமிடப்பட்டு
சிறுவர் பூங்காவின் சுற்றுச்சுவர் நடைபயிற்சிக்கான நடைதளம், விளையாட்டு உபகரணங்கள் புல்தரைகள், வண்ணமலர் செடிகள், மரங்கள், மின் விளக்குகள், கைப்பிடி சுவர்கள், RO சிஸ்டம், கூடுதல் இருக்கை வசதிகள், வர்ணம் பூசுதல் மற்றும் கழிப்பறை வசதிகள் ஆகியவை அமைக்கும் பணிகள் துரிதமாக நடைபெற்று வருகிறது. மேற்படி பணிகளானது விரைவில் பொதுமக்கள் பயன்பாட்டிற்கு கொண்டு வரப்படுமென மாநகராட்சி ஆணையர் (ம) தனி அலுவலர், டாக்டர். ஆல்பி ஜாண் வர்க்கீஸ் தெரிவித்தார்.
மக்கள் கருத்து
மேலும் தொடரும் செய்திகள்

பேட்டையில் கல்லூரி மாணவிமாயம் : போலீஸ் தேடல்
சனி 23, பிப்ரவரி 2019 8:30:23 PM (IST)

குற்றாலம் மலைப்பகுதியில் மீண்டும் சிறுத்தை நடமாட்டம் ?
சனி 23, பிப்ரவரி 2019 8:16:51 PM (IST)

சிலம்பு ரயில் வாரத்திற்கு மும்முறை இயக்கப்படும் : தெற்கு ரயில்வே அறிவிப்பு
சனி 23, பிப்ரவரி 2019 7:14:59 PM (IST)

வெடி விபத்தில் மரணம் அடைந்தவர்கள் குடும்பங்களுக்கு நிவாரண உதவி
சனி 23, பிப்ரவரி 2019 6:54:33 PM (IST)

ஒப்பந்த தொழிலாளர்களை நிரந்தரமாக்க வேண்டும் : குடிநீர் வடிகால் வாரிய சங்கம் வலியுறுத்தல்
சனி 23, பிப்ரவரி 2019 6:02:39 PM (IST)

நகைமதீப்பீட்டாளர்களை வங்கி ஊழியராக்க கோரி சி. ஐ.டி.யு ஆர்ப்பாட்டம்
சனி 23, பிப்ரவரி 2019 5:44:34 PM (IST)

Prabhakar BenedictAug 10, 2018 - 11:10:28 AM | Posted IP 162.1*****