» செய்திகள் - விளையாட்டு » மாவட்ட செய்தி (திருநெல்வேலி)

ஆசிரியை திட்டியதால் மாணவர் தற்காெலை முயற்சி : அச்சன்புதுார் போலீசார் விசாரணை

வியாழன் 9, ஆகஸ்ட் 2018 8:48:59 PM (IST)

தென்காசி அருகே ஆசிரியை திட்டியதால் மாணவர் விஷம் குடித்து தற்கொலைக்கு முயன்றார். 

திருநெல்வேலி மாவட்டம் தென்காசி அருகே பண்பொழியை சேர்ந்தவர் கனகராஜ் என்பவரது மகன் மதிஒளி (14). இவர் அப்பகுதியிலுள்ள தனியார் பள்ளியொன்றில் 10 ம் வகுப்பு படித்து வருகிறார். மதிஒளி சரியாக படிப்பதில்லை என்று கூறப்படுகிறது. இதனால் அவரது வகுப்பு ஆசிரியை மாணவரை திட்டினாராம். 

எனவே விரக்தியடைந்த மதிஒளி விஷமருந்தி மயங்கி விழுந்தாராம். உடனே அவரை அவரது குடும்பத்தினர் தென்காசி அரசு மருத்துவமனையில் சேர்த்தனர். அங்கு அவருக்கு சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. அச்சன்புதுார் போலீசார் இது குறித்த புகாரின் பேரில் வழக்குபதிந்து விசாரணை நடத்தி வருகின்றனர்.


மக்கள் கருத்து


மக்கள் பதிவு செய்யும் கருத்துகள் தணிக்கையின்றி பிரசுரமாகும் வகையில் மென்பொருள் வடிவமைக்கப்பட்டுள்ளது. தொழில்நுட்ப குறைபாடுகள் காரணமாக கருத்துக்கள் பதிவாவதில் சிறிது காலதாமதம் ஏற்பட வாய்ப்புள்ளது. வாசகர்களின் கருத்துக்களுக்கு நிர்வாகம் பொறுப்பாக மாட்டார்கள். நாகரீகமற்ற மற்றும் பிறர் மனதை புண்படுத்தகூடிய கருத்துகளை / வார்த்தைகளைப் பயன்படுத்துவதை தவிர்க்கும்படி கேட்டுக்கொள்கிறோம்.

ஆங்கிலத்தில் தட்டச்சு செய்ய Ctrl+G -ஐ அழுத்தவும்.மேலும் தொடரும் செய்திகள்

Sponsored AdsSterlite Industries (I) Ltd
Tirunelveli Business Directory