» செய்திகள் - விளையாட்டு » மாவட்ட செய்தி (திருநெல்வேலி)

சுரண்டையில் பைக் கவிழ்ந்து வாலிபர் பலி

வெள்ளி 10, ஆகஸ்ட் 2018 10:30:29 AM (IST)

நெல்லை மாவட்டம் சுரண்டையில் பைக் கவிழ்ந்து விபத்துக்குள்ளானதில் வாலிபர் பலியானார். 

சுரண்டையை அடுத்துள்ள சேர்ந்தமரம் அருகில் உள்ள கடம்பன் குளத்தை சேர்ந்த ரதமுடையார் மகன் பெரியசாமி (33) நேற்று  ஆணைக்குளம் வழியாக ஊத்துமலைக்கு  புல்லட்டில் சென்று கொண்டு இருந்தார் .அப்போது ஆணைக்குளம் ரோட்டில் உள்ள அரசு கல்லூரி அருகில் நிலைதடுமாறி விழுந்ததில் தலையில் காயம் ஏற்பட்டு சம்பவ இடத்திலேயே பலியானார்  .

சம்பவ இடத்துக்கு விரைந்து வந்த சுரண்டை போலீசார் பிரேதத்தை தென்காசி அரசு மருத்துவமனைக்கு பிரேத பரிசோதனைக்கு அனுப்பி வைத்தனர். விபத்து குறித்து  சுரண்டை போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள் . விபத்தில் பலியான பெரியசாமிக்கு குப்புத்தாய்(27) என்ற மனைவியும்  ஒரு பெண்குழந்தையும் உள்ளது 


மக்கள் கருத்து


மக்கள் பதிவு செய்யும் கருத்துகள் தணிக்கையின்றி பிரசுரமாகும் வகையில் மென்பொருள் வடிவமைக்கப்பட்டுள்ளது. தொழில்நுட்ப குறைபாடுகள் காரணமாக கருத்துக்கள் பதிவாவதில் சிறிது காலதாமதம் ஏற்பட வாய்ப்புள்ளது. வாசகர்களின் கருத்துக்களுக்கு நிர்வாகம் பொறுப்பாக மாட்டார்கள். நாகரீகமற்ற மற்றும் பிறர் மனதை புண்படுத்தகூடிய கருத்துகளை / வார்த்தைகளைப் பயன்படுத்துவதை தவிர்க்கும்படி கேட்டுக்கொள்கிறோம்.

ஆங்கிலத்தில் தட்டச்சு செய்ய Ctrl+G -ஐ அழுத்தவும்.மேலும் தொடரும் செய்திகள்


Sponsored Ads
Tirunelveli Business Directory